புதன், 3 ஜூலை, 2024

புனித தோமையார் திருவிழா! (03-07-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்று தாய்த்திரு அவையானது, இந்தியாவின் திருத்தூதரான புனித தோமையாரை நினைவு கூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. என் ஆண்டவரை கண்டால் ஒழிய நான் நம்ப மாட்டேன் என்று சொன்ன மனிதன், ஆண்டவர் இயேசுவை கண்டவுடனே, என் ஆண்டவரே என் தேவனே என்று சொல்லி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த ஒரு மனிதர். ஆண்டவர் இயேசுவை அறிவிப்பதற்காக அவர் இந்தியா வந்தார் என்பது மரபு வழி செய்தி. இந்த தோமையாரைப் போல நமது வாழ்வை இன்றைய நாளில் நெறிப்படுத்திக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். 

  அறிந்த ஆண்டவருக்காக அனைத்து விதமான இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஆண்டவரை அறிவிப்பதற்காக ஆயிரக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்து வந்து ஆண்டவர் இயேசுவை அறிவித்த இந்த தோமையாரை இதயத்தில் இருத்தியவர்களாக, நாம் அறிந்த இயேசுவை நம்மோடு இருப்பவர்களுக்கு எத்துணை தடைகள் வந்தாலும், சவால்கள் வந்தாலும் அத்தனைக்கும் மத்தியிலும் அறிவிக்க வேண்டும் என்பதை இதயத்தில் ஏற்றுக் கொள்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...