வெள்ளி, 19 ஜூலை, 2024

ஆண்டவர் இரக்கத்தையே விரும்புகிறார்! (19-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறைவார்த்தையானது ஆண்டவர் இரக்கத்தையே விரும்புகிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாக நம்மோடு உள்ள சக மனிதர்களின் மீது இரக்கம் கொண்டவர்களாக இரக்கத்திற்குரிய செயல்களை ஒவ்வொரு நாளும் முன்னெடுப்பவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறை வார்த்தை வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் இரக்கத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு கடவுள் விரும்புகின்ற மக்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)