புதன், 10 ஜூலை, 2024

ஆண்டவரை நம்பி அவரைப் போல வாழ்வோம்! (11-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது நாம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியே அறிவிப்பவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரை நம்பி அவரைப் போல இச்சமூகத்தில் நம்மால் வாழ முடியும் என்பதை மனதில் இருத்தியவர்களாக நம் சொல்லிலும் செயலிலும் இயேசுவை பின்பற்றுபவர்கள் நாம் என்பதை வெளிகாட்டும் வண்ணமாக இயேசுவை பின்தொடர்ந்த சீடர்களைப் போல நமது வாழ்வையும் அமைத்துக் கொண்டு ஆண்டவர் விரும்புகின்ற மக்களாக ஆயிரக்கணக்கான அறப்பணிகளை ஆர்வத்தோடு முன்னெடுத்துச் செல்லுகின்ற இயேசுவின் உண்மைச் சீடர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறையருள் வேண்டிட நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம். இறைவன் தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக இறைவன் கொடுத்திருக்கின்ற இன்றைய இனிய நாளில் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்து ஆண்டவர் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...