வெள்ளி, 19 ஜூலை, 2024

இயேசுவைப் போல வாழ்வோம்!(16-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறைவார்த்தை நன்மைகள் செய்தால் கூட அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத மக்களை குறித்து சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஒருவரை பற்றி நாம் கொண்டிருக்கின்ற நேர்மறையான எண்ணங்கள் அவர் மீதான நன்மதிப்பை அதிகப்படுத்துகிறது. அதே சமயம் ஒருவர் மீது நாம் கொண்டிருக்கக் கூடிய எதிர்மறையான எண்ணங்கள் அவர்கள் எத்தனை விதமான நன்மைகள் செய்தாலும் அந்த நன்மைகளில் எதிர்மறையான சிந்தனையோடு தீமைகளை மட்டும் நாடித் தேடுகின்ற மனநிலை நம்மில் பலரிடம் இருக்கிறது. இயேசுவின் உடன் பயணித்தவர்களை உற்று நோக்குகிற போது, இயேசுவின் செயல்களில் குற்றம் காணும் மனநிலை கொண்ட மனிதர்கள் அவரை எப்போதும் சூழ்ந்து இருந்தார்கள். பல நேரங்களில் இந்த இயேசுவின் அரும் அடையாளங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். அதை விமர்சித்தார்கள். ஆனால், விமர்சித்தவர்களுக்கும், ஏற்றுக் கொள்ள தயங்கியவர்களுக்கும், தனக்கு தடையாக இருந்தவர்களுக்கும் நன்மைகளை செய்பவராக இயேசு தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். இந்த இயேசுவை இதயத்தில் இருத்தியவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை இயேசுவின் வாழ்வு போல அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...