செவ்வாய், 9 ஜூலை, 2024

ஆண்டவர் இயேசுவை அதிகமாக பற்றி கொள்வோம்! (10-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 இன்றைய இறைவார்த்தையானது ஆண்டவரின் பணியை செய்ய நம் அத்துணை பேருக்கும் அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய பணிக்காக சீடர்களை அழைத்ததை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். 

 இந்த வாசகப் பகுதி அன்று வாழ்ந்த மக்களுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக இன்றைய சமூகத்தில் இன்று இந்த அகிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களுக்கும் எனக்குமான அழைப்பு அது. ஆண்டவரின் பணியை செய்ய நாம் அத்தனை பேரும் அழைக்கப்படுகிறோம். இந்த ஆண்டவன் இயேசுவின் பணியை செய்வதற்கு ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாக நீங்களும் நானும் இந்த உலகக் கவர்ச்சிகளை விட்டுவிட்டு, ஆண்டவரை உறுதியாக பற்றி பிடித்துக்கொண்டு, ஆண்டவரின் துணையோடு ஆயிரக்கணக்கான அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் இணைந்து முன்னெடுக்க இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் ஒவ்வொருவரும் வரும் அழைக்கப்படுகிறோம்.

    இந்த இறை வார்த்தையை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவர் இயேசுவிடம் காணப்பட்ட ஆயிரக்கணக்கான நற்பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு இந்த நற்பண்புகளை அகிலத்தில் அறிவிக்கவும், அடுத்தவர் வாழ்வு ஏற்றம் பெறுகின்ற வகையில் இயேசுவின் வாழ்வை சுட்டிக் காண்பித்து, ஒவ்வொருவரின் வாழ்வும் இயேசுவுக்கு உகந்த வாழ்வாக மாற்றுவதற்கு இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...