ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது இறப்பை பற்றி எடுத்துரைக்கின்றார். தன்னோடு இருப்பவர்களுள் ஒருவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தாலும் கூட ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களுக்கு மற்றவர்களுக்கான வாழ்க்கை நெறியை கற்பிப்பதற்கு தகுதியுள்ளவர்களாக அவர்களை மாற்றுகிறார் என்பதை இன்றைய வாசகங்களின் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். எத்தனையோ குறைபாடுகள் இயேசுவின் சீடர்களிடத்திலிருந்தாலும் கூட, குறைகளை மிகைப்படுத்தாமல் அந்த குறைகளை களைவதற்கு ஏற்ற வகையிலும் மற்றவர் வாழ்வில் இருக்கிற குறைகளை களைவதற்கு ஏற்ற வகையிலும் தன்னுடைய சீடர்களை பக்குவப்படுத்திய இயேசுவைப் போலவே நீங்களும் நானும் நமது உள்ளத்தை சீர்தூக்கி பார்த்து நிமிடம் இருக்கின்ற குறைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னோடு இருந்த சீடர்களின் மனநிலையை அறிந்திருந்தாலும் கூட அவர்களின் வாழ்வு மேம்படுவதற்கான வழிகளை கற்பித்தார். அவர்கள் வழியாக பலரின் வாழ்வு மேம்படுவதற்கு ஏற்ற வகையில் அவர்களை தயார்படுத்தினார். இந்த இயேசுவின் மனநிலையை நம்மிலும் கொண்டவர்களாக நம்மோடு வாழ்பவர்களை ஊக்கப்படுத்தவும் நம்மோடு வாழ்பவர்களிடத்தில் இணைந்து வாழவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக