இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்று தாய்த்திரு அவையானது புனித யோசேப்பை நினைவு கூர அழைப்பு விடுக்கிறது. விவிலியத்தில் நேர்மையாளராக சுட்டிக் காட்டப்படுகின்ற இந்த யோசேப்பு, இயேசுவின் வளர்ப்பு தந்தை ஆன இவர் தன்னுடைய பணியை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை பாதுகாக்கின்ற பணையினை மிகவும் சிறப்பாக செய்தவர். இளம் வயதில் இயேசுவை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். தனக்கு தெரிந்த அத்தனை நன்மைகளையும் தன்னுடைய மகனுக்கு கற்றுக் கொடுத்த ஒரு நல்லதொரு தந்தையாக இந்த யோசேப்பு திகழ்கின்றார். எனவே தான் தொழிலாளர்களின் பாதுகாவலராகவும் படிக்கின்ற மாணவர்களின் பாதுகாவலராகவும் இவர் முன்னிறுத்தப்படுகின்றார். இந்த யோசேப்பை நினைவு கூருகின்ற இந்த நல்ல நாளிலே இவரின் நாமத்தை தாங்கி இருக்கிற அனைவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை மகிழ்வோடு உரித்தாக்குகிறேன். சூசையப்பரிடம் காணப்படுகின்ற நல்ல பண்புகளை எல்லாம் நமது பண்புகளாக எடுத்துக்கொண்டு கடவுளுக்கு உகந்த மனிதர்களாக, கடவுள் நம்மிடம் ஒப்படைக்கின்ற பணிகளை முகம் சுழிக்காமல் கடமை உணர்வோடு பொறுப்போடும் செய்கின்ற நபர்களாக நீங்களும் நானும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக