இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்று இயேசு செய்த முதல் புதுமையினை நாம் நற்செய்தி வாசகமாக வாசிக்க கேட்கிறோம். கானாவூர் திருமணத்தில் தண்ணீரை இயேசு திராட்சை ரசமாக மாற்றினார். தனது தாயின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்த ஒரு மனிதனாக கடவுளின் வல்லமையோடு தண்ணீரை ரசமாக மாற்றி அந்த திருமண வீட்டில் இன்னலுற்றிருந்த நிலையில் அச்சத்தோடும் கலக்கத்தோடும் குழப்பத்தோடும் செய்வது அறியாது தடுமாறி கொண்டிருந்த அந்த திருமண வீட்டாருக்கு இயேசு புதுமை மூலமாக வாழ்வு தருவதை நாம் இன்றைய வாசகத்தின் வாயிலாக உணர்ந்து கொள்கிறோம்.
நம்பிக்கையோடு நாம் கடவுளை நாடிச் செல்லுகிற போது நமது எல்லாவிதமான சூழல்களிலும் இன்னல்களிலும் இந்த இறைவனின் உடனிறுப்பு நம்மை வழி நடத்தும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக புரிந்துகொண்டு அழைக்கப்படுகிறோம். அதிலும் குறிப்பாக அன்னை மரியாவின் வழியாக நாம் உதவியை நாடுகிற போது கண்டிப்பாக நாம் உதவிகளை பெற்றுக் கொள்வோம் என்பதை இந்த கானாவூர் திருமண உவமை வழியாக நாம் உணர்ந்து கொண்ட அழைக்கப்பட்டிருக்கிறோம்.
அனுதினமும் ஆலயத்திற்கு வந்து திருப்பலியில் பங்கெடுத்து புனிதர்களின் துணையையும் அன்னை மரியாவின் உன்னையையும் நாடி ஜெபிக்கின்ற நாம் ஒவ்வொருவருமே இன்றைய நாளில் நமது நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டவர்களாக இன்னும் ஆழமான நம்பிக்கையோடு மரியாவின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அணுகுவதற்கான ஆற்றல் வேண்டி தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக