இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று தாய்த்திரு அவையோடு இணைந்து, நாம் தமிழகத்தின் முதல் புனிதரான தேவ சகாயம் அவர்களை நாம் நினைவு கூருகிறோம். எத்தனையோ இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியிலும் தான் ஏற்றுக்கொண்ட அந்த இயேசுவின் வார்த்தைகளை ஆழமாக நம்பி, அந்த வார்த்தையின் மீது நம்பிக்கை கொண்ட மனிதனாக, எல்லா இடர்பாடுகளையும் எதிர்கொண்ட ஒரு மனிதனாக, இந்த இயேசுவிற்காக இந்த இயேசுவை பின்பற்றியதன் அடிப்படையில், அவரது வார்த்தைகளை வாழ்வாக்க முயன்றதன் அடிப்படையில், இரத்தம் சிந்தி உயிர் நீத்தார். அவரை இன்றைய நாளில் நாம் நினைவு கூருகின்றோம்.
இன்றைய முதல் வாசகம் கூட கடவுளின் வார்த்தை எத்தகைய ஆற்றல் மிக்கது என்பதை எடுத்துரைக்கிறது.
இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாளும் வளர அழைக்கப்படுகிறோம்.
நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசுவின் வார்த்தைக்கு செவி கொடுத்து, சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்பவர் இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றார். இந்த இயேசுவை அறிந்து, அவரைப் பின்பற்றுகின்றோம் என்று சொல்லுகின்ற நாம் ஒவ்வொருவருமே எந்த அளவிற்கு இந்த இயேசுவின் வார்த்தைகளின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். இந்த ஆண்டவரின் வார்த்தைகளின் மீது, ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் அவரது வார்த்தைகளை வாழ்வாக்க முயற்சிக்கின்ற மனிதர்களாக, தடைகள் வரினும், இன்னல்கள் வரினும், அனைத்திற்கும் மத்தியிலும் தேவசகாயத்தைப் போலவே, நாமும் நமது வாழ்வில் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க ஆற்றல் வேண்டி, இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக