இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
தீய ஆவி பிடித்திருந்த ஒரு மனிதனிடத்தில் இருந்து தீய ஆவியை இயேசு விரட்டுவதை இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். இந்த வாசகத்தின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நம்மிடம் இருக்கின்ற தேவையற்ற காரியங்களை எல்லாம் கடவுள் அகற்ற வல்லவர் என்ற நம்பிக்கையோடு அந்த ஆண்டவரை நாடிச் செல்லுகின்ற மனிதர்களாக நாம் நாளும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாளில் இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.
பல நேரங்களில் தவறு என தெரிந்தும் அந்த தவறினை செய்யக்கூடியவர்களாகவே நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்கிறோம். ஆனால் ஆண்டவரை நம்பிக்கையோடு நாடிச் செல்லுகிற போது, நம்மிடம் இருக்கின்ற தவறான எண்ணங்களையும், நம்மிடம் இருக்கின்ற தேவையற்ற காரியங்களையும் இந்த கடவுள் நம்மிடம் இருந்து அகற்ற வல்லவர் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடத்தில் மேலோங்குமானால், கண்டிப்பாக கடவுள் தருகின்ற மாற்றத்தைக் கண்டு கொண்ட மனிதர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நாளும் அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். அத்தகைய ஒரு வாழ்வை நம் வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக