ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பிறகாக துணிச்சல் பெற்றவர்களாக சீடர்கள் எல்லாம் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை உலகெங்கும் சென்று பறைசாற்றக் கூடியவர்களாக இருந்தார்கள் இப்பணியை அவர்கள் செய்வதற்கு பல்வேறு விதமான தடைகளை வாழ்வில் எதிர்கொண்டார்கள். குறிப்பாக யூதர்கள் ஆகிய பரிசேயரும் சதுசேயரும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவின் உயிர்ப்பு என்பது ஒரு கட்டுக்கதை என்று சொல்லி பலருக்கு பலவிதமான பொருளாதார உதவிகளை செய்து கட்டுக்கதைகளை பரப்பவும் செய்தார்கள். ஆனால் அத்தனை கட்டுக்கதைகளுக்கு மத்தியிலும் கூட உண்மையை உரக்கச் சொல்லுகின்ற மனிதர்களாக இயேசுவின் சீடர்கள் செயல்பட்டார்கள். அதன் விளைவுதான் இன்று வரை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் இன்றும் என்றும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக தொடர்ந்து பயணிக்க ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக