இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தையின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து அச்சத்தை களைவதற்கு சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். படகில் சென்று கொண்டிருந்த சீடர்கள் கடல் மீது நடந்து வருகின்ற இயேசுவை கண்டு அஞ்சிய போது, அஞ்சாதீர்கள்! நான்தான் என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கையை தருகின்றார். கடவுள் தண்ணீரின் மீது நடந்து அவர்களின் நம்பிக்கையை ஆழப்படுத்துகின்றார். இப்படி இயேசுவிடமிருந்து கற்றுக் கொண்ட, அவரிடமிருந்து உள்வாங்கிக் கொண்ட மனிதர்களாகத் தான் இந்த இயேசுவை பற்றிய நற்செய்தியை பலருக்கும்
அறிவிக்கின்ற மனிதர்களாக இருந்தார்கள். இணைந்து வாழ்ந்த போது பலவிதமான இன்னல்கள் அவர்களுக்கு இடையே ஏற்பட்டது. அப்படி இன்னல்கள் வருகின்ற போதெல்லாம் கலக்கம் கொள்ளுகின்ற மனிதர்களாக இருந்து விடாமல், அஞ்சாது, ஆண்டவரின் துணையை நாடி தேடுகின்ற மனிதர்களாக இயேசுவின் சீடர்கள் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம்.
இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு வாழ்வில் வருகின்ற அத்தனை துயரங்களிலும் இன்னல்களிலும் ஆண்டவரின் துணையோடு அனைத்தையும் எதிர்கொள்ள ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக