இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு செய்தியை பலரும் நம்பிய போது, ஐயம் கொண்ட ஒரு மனிதனாக, உயிர்த்த ஆண்டவரை நான் கண்ணால் காண வேண்டும்; ஆணிகள் துளைக்கப்பட்ட அவரது கைகளையும் விலாவையும் நான் தொட்டு பார்க்க வேண்டும் என சொல்லிய தோமாவிற்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்து காட்சி கொடுக்கின்றார். ஆண்டவரை பார்த்த மாத்திரமே, என் ஆண்டவரே! என் தேவனே! என்று சொல்லி தன்னை முழுவதுமாக அவரிடத்தில் சரணாகதி அடையச் செய்கின்றார் தோமா. இந்த தோமாவிடத்தில் நீ கண்டதால் நம்பினாய்; காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்று இயேசு சொன்ன அந்த வார்த்தையின் அடிப்படையில்
இன்று வரை நாம் கடவுளை நேரடியாக காணவில்லை என்றாலும், இந்த கடவுளை நமது வாழ்வில் பல்வேறு தருணங்களில் பலவிதமான அனுபவங்கள் வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம். நம்பிக்கையில் நிறைந்திருக்கின்ற நீங்களும் நானும் தொடர்ந்து நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், ஆழமான நம்பிக்கையில் நிலைத்திருக்கின்ற போது ஆண்டவரிடமிருந்து அபரிமிதமான ஆசிகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நமது நம்பிக்கையை பதிய வைத்து சொல்லிலும் செயலிலும் அவருக்கு சான்று பகர்கின்ற மனிதர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம் இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக