ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய இறை வார்த்தைகள் ஆண்டவர் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொள்கிறவர்கள் நிலை வாழ்வை பெறுவார்கள் என்ற வாழ்வுக்கான உறுதியை நமக்குத் தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்த காரணத்தினால் பேதுரு பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார். இன்னல்களுக்கு மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் அதட்டல்களுக்கு மத்தியிலும் கூட, மனிதருக்கு கீழ்ப்படிவதை விட கடவுளுக்கு கீழ்ப்படிபவர்களாகவே நாங்கள் இருப்போம் என்று சொல்லி தாங்கள் அறிந்த கடவுளைப் பற்றி தரணி முழுவதும் பேசுகின்ற நபர்களாக தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட இந்த திருத்தூதர்களை இதயத்தில் இருத்தியவர்களாக நாமும் இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாக நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக