இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
தூய ஆவியாரால் மறுபிறப்படைந்தவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பு இன்றைய இறை வார்த்தை வழியாக நமக்கு தரப்படுகிறது. ஆவியில் பிறப்பவர்கள் ஆண்டவருக்கு உரியவற்றை நாடுகிறவர்களாகவும், இறையாட்சியின் மதிப்பீடுகளை இதயத்தில் இருத்தி சொல்லிலும் செயலிலும் இந்த இறையாட்சி இந்த மண்ணில் மலர்வதற்கு ஏற்ற வகையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடியவர்களுமாக இருப்பார்கள் என்பதை இன்றைய இறைவார்த்தை வாயிலாக நீங்களும் நானும் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றோம். ஆண்டவரிடத்தில் அபரிமிதமான ஆசிகளை பெற்று அனுதினமும் இந்த அகிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே தூய ஆவியாரின் துணையை நாடி, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப அவரின் குரலுக்கு செவிகொடுத்து, நமது சொல்லையும் செயலையும் சரி செய்து கொண்டு, கடவுளுக்கு உகந்த மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக