இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டுகொண்ட மகதலா மரியா மகிழ்ச்சியுறுவதை குறித்து இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம்.
உயிர்த்த ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்டவராக திருத்தூதர் பேதுரு அனைவரும் மத்தியிலும் எழுந்து நின்று நல்லதொரு மனமாற்றத்தை பெற்றவர்களாக இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் என நற்செய்தி அறிவிப்பதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம்.
இந்த இரண்டு வாசகங்களையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது நாம் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற இந்நாட்களில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை துணிவோடு அருகில் இருப்பவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக மீண்டும் மீண்டுமாக அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இறைவன் உணர்த்துகின்ற இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வுக்கான சிந்தனைகளை இதயத்தில் இருத்திக் கொண்டவர்களாக அனுதின வாழ்வில் ஆண்டவரைப் பற்றி கிடைக்கின்ற நேரங்களில் எல்லாம் ஒருவர் மற்றவரோடு உரையாடவும் நற்செய்தி அறிவிக்கின்ற நல்ல பணியாளர்களாக நம் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக