ஞாயிறு, 6 ஜூன், 2021

ஒளி வீசிட... (8.6.2021)

 ஒளி வீசிட...

    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.



    மனிதன் ஒருவன் தன் கையில் எரியும் மெழுகுதிரி ஒன்றை வைத்துக்கொண்டு வெளிச்சத்தைத் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான்.

    இந்த மனிதனைப் போல தான் இன்று நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமூகத்தில் ஒளியாக இருக்க நாம் அழைக்கப்படுகின்றோம். நாமே அந்த ஒளி என்பதை பல நேரங்களில் நாம் அறியாதவர்களாக உள்ளோம். நமது ஒளி மனிதர் முன் ஒளிர வேண்டும் என இயேசு சொல்கிறார். மனிதர் முன்பாக ஒளி வீசுவது என்பது நமது அறச்செயல்கள் வழியாக சக மனிதனை அரவணைத்து வாழ்வதாகும். ஆனால் இந்தப் பணியைச் செய்வதில் நம்மிடையே தயக்கம் ஏற்படுகிறது. நமக்குள் இருக்கும்  ஒளியை நாம் ஏற்ற விரும்புவதில்லை. பலர் அதைக் கண்டு கொள்ளவும் முயல்வதில்லை. ஆனால் இயேசு இந்த உலகத்தில் ஒளியாக இருந்தார். சமூகத்தில் அவர் ஒளியாக திகழ்ந்ததன் அடிப்படையில் தான் பலரும் அவரை தேடிச் சென்றார்கள். 



                   இயேசு எப்படி இம்மண்ணில் வாழ்ந்த போது ஒளி வீசினாரோ, அவரை பின்பற்றுகிற நாமும் இந்த சமூகத்தில் ஒளி வீச கூடியவர்களாக இருக்க வேண்டும். நமது வாழ்வு இவரைப் போல வாழ வேண்டும் என சொல்லுமளவிற்கு அமைய வேண்டும். அவ்வாறு நமது வாழ்வு அமைகிறது என்றால் நாம் இறைவன் கூறுவதற்கு ஏற்ப மனிதர் முன் ஒளிவீச கூடியவர்களாக இருப்போம். அத்தகைய ஒளி வீசக்கூடிய பணி தான் ஆண்டவர் இயேசுவோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும் என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். எனவே நமது செயல்பாடுகளால் இச்சமூகத்தில் ஒளி வீசியவர்களாய் இறை உறவில் இணைந்திட இறை அருளை வேண்டுவோம்.

        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...