ஞாயிறு, 9 மே, 2021

ஆவியானவரை நமது உள்ளத்தில் ஏற்போம்... (10.5.2021)

ஆவியானவரை நமது உள்ளத்தில் ஏற்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு ஊரில் ஒரு ஓவியன் இருந்தான். அவன் ஆண்டவர் இயேசு கதவை தட்டுவது போன்ற ஒரு ஓவியத்தை மிகவும் சிரமப்பட்டு வரைந்து முடித்தான். தான் வரைந்த ஓவியத்தை எடுத்துக்கொண்டு சென்று சுற்றி இருந்த ஒவ்வொருவரிடமும் காண்பித்துக் கொண்டே இருந்தான். அதைப் பார்த்த ஒவ்வொருவருமே வியந்து போனார்கள். மிகவும் அழகாக வரைந்திருக்கிறாய் என்று கூறி பலர் அவனைப் பாராட்டினார்கள்.  ஆனால் ஒருவர் மட்டும் அந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு என்ன வரைந்திருக்கிறாய், இந்த கதவில் கைப் பிடி இல்லை என்றான். உடனே வரைந்த ஓவியன் சொன்னான், இந்த கதவுக்கான கைப்பிடி உட்புறத்தில் தான் இருக்கிறது.  தட்டுகின்ற இயேசுவை நீ ஏற்றுக் கொள்ள விரும்பினால், கதவை திறக்க வேண்டியது நீ தான்.  எனவேதான் வெளிப்புறத்தில் கைப்பிடி வைக்காமல் இந்த ஓவியத்தை வரைந்தேன் என்று கூறினானாம்.
தொடக்கத்திரு அவையில் திருத்தூதர்கள் பேசிய வார்த்தைகளை கேட்டு மனம் மாறியவர்கள் பலர். அவர்கள் ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர்கள். இன்றைய முதல் வாசகத்திலும் பவுல் பேசிய வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளுமாறு தூய ஆவியார் லீதியாவின் இதயத்தைத் திறந்தார. இன்றைய நற்செய்தி வாசகத்தில் லீதியாவின் இதயத்தை திறந்த  அதே தூய ஆவியானவரைத் தான் நமக்கு இறைவன் தருவதாக வாக்களிக்கிறார். இறைவன் தருகின்ற இந்த தூய ஆவியானவரைத் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.  இந்த தூய ஆவியானவரை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும் போதுதான் அருகிலுள்ள அயலானின் தேவையை நமது தேவை எனக் கருதி, நம்மாலான  சின்னஞ்சிறு உதவிகள் மூலம்  அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.



இன்று நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பலரும் உதவி இழந்து எப்படி இந்த நோயிலிருந்து மீள்வது எனத் தெரியாமல் அச்சமுற்று திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஆண்டவர் தூய ஆவியை நமக்கு தருவதாக கூறுகிறார். ஆண்டவர் தரும் தூய ஆவி என்பது நமக்கு  மன தைரியத்தை கொடுக்கக் கூடியவராகும். அந்த தூய ஆவியானவரைப் பெற்றுக் கொள்கின்ற நாம் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் துணிவோடு நின்று வாழ்வில்  வளம் பெற அழைக்கப்படுகிறோம். ஆதற்கு இந்த  தூய ஆவியானவரை  உள்ளத்தில் ஏற்போம். இறைவன் தாமே நமக்குத் துணையாக இருந்து துணிவைத் தந்து இந்த இக்கட்டான சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் வலிமை தர வேண்டி இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...