வாருங்கள் கடிதம் எழுதுவோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் மக்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தும் வகையில் திருத்தூதர்கள் கடிதம் எழுதி அனுப்புவதை நாம் வாசிக்க கேட்டோம். கடிதம் என்றாலே நினைவுக்கு வருவது, நான் சிறுவனாக இருந்தபோது என் மனதைத் தொட்ட ஒரு கடிதம். அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என்று ஒரு பாடல் வரிகள் உண்டு. அப்பாடல் வரிகளில் ஒரு குடும்பச் சூழ்நிலையை, ஏழ்மை நிலையை படம் பிடித்து காட்டும் வகையில் அழகாக அப்பாடலானது எழுதப்பட்டிருந்தது. இன்று நிலவக்கூடிய இச்சூழலில் கடிதம் என்றால் தற்சமயம் வாட்ஸ்அப் வழியாக அதிகம் பரவக்கூடிய ஒரு கடிதம், நீங்கள் எங்களுக்கு பிரதமராக இருப்பதற்கான தகுதியை இழந்து விட்டீர்கள் என பத்திரிகை ஆசிரியரான அருந்ததிராய் பாரத பிரதமரை குறித்து எழுதிய கடிதம் ஆனது நினைவுக்கு எட்டியது. நிலவும் இந்த இக்கட்டான சூழலில் திருத்தூதர்கள் எழுதிய கடிதம் போல நாமென்ன கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்த போது கடிதத்தில் எழுதவேண்டிய கருத்தாக, இன்று நாம் வாசிக்க கேட்ட திருத்தூதர்களின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த வாழ்த்தும், அமைதியும் ஊக்கப்படுத்துதலும் கடிதத்தில் இடம்பெற வேண்டும்.அலைபேசி வழியாகவும் பலவிதமான இணைய வழியாகவும் ஆங்கிலம் இக்கட்டான சூழ்நிலையில் ஒருவர் மற்றவரை எப்படி காத்துக் கொள்ள வேண்டும், எத்தகைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற செய்தி நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது. இன்னொருபுறம் எனக்கு தெரிந்த வகையில் எப்படி எல்லாம் இந்த பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவிதமான வழிமுறைகளை கடிதங்கள் வழியாகவும் இணையம் வழியாகவும் நாளுக்குநாள் ஒருவர் மற்றவரோடு உறவு பரிமாறும் வகையில் கடிதங்களாக பரிமாறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அன்றாடம் பல குறுஞ்செய்திகளை பகிரக் கூடியவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் புறா மூலமாக தூது அனுப்பினோம். நாகரீகம் வளர வளர ஒரு வகையில் எழுதி கொடுத்து எங்கு அனுப்ப வேண்டுமோ யாருக்கு அனுப்ப வேண்டுமோ அங்கு சென்று கொடுத்து வரச் சொன்னோம். காலப்போக்கில் காகிதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது, காகிதங்களில் கடிதம் எழுதத் தொடங்கினோம். இன்று வளர்ச்சியின் உச்சத்திற்கு சென்று அனுதினமும் அலைபேசி வழியாகவும் இணையம் வழியாகவும் கடிதங்கள் எழுத தொடங்கினோம். கடிதங்களையும் குறுஞ் செய்திகளையும் உடனுக்குடன் படித்தும் எழுதி அனுப்பிக் கொண்டும் இருக்கிறோம். அன்று இயேசுவின் சீடர்கள் இருந்த காலகட்டத்தில், கடிதப் போக்குவரத்து இருந்தது. கடிதம போக்குவரத்து என்பது என்பது கடிதத்தை மையப்படுத்தி அல்ல. விலங்கின் தோலில் தான் கடிதங்கள் எழுதப்பட்டன. அதனை எடுத்துச் சென்று வாசித்து ஒருவருக்கொருவர் ஊக்கம் பெற்றுக்கொண்டனர். மடலை எடுத்து வாசித்து ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று நம் கையில் நம்மை விட்டு எப்போதும் நீங்கா கருவியாக இருக்கக்கூடிய இந்த கைபேசி வழியாகவும் அனுதினமும் பல செய்திகளை பகிருகிறோம். நாம் பகிரும் செய்தி எத்தகைய செய்தியாக இருக்கிறது? அன்று தொடக்ககாலத்தில் திருத்தூதர்கள் அனுப்பிய கடிதம் படிப்பவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் வழங்கக் கூடிய ஒன்றாக அமைந்திருந்தது.
இன்று நாம் வாழும் சமூகத்தில் நாம் எழுதும் கடிதம் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலையும் ஊக்கத்தையும் நலனையும் தரக்கூடிய வகையில் எழுதப்பட வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் இணைந்து இருக்கவும் ஒருவர் மற்றவருக்காக தியாகங்கள் பல செய்து ஒருவர் மற்றவரின் உயிர் காக்கவும் உதவிட வேண்டும் என்ற செய்தியினை நமக்குத் தருகின்றார். ஆண்டவர் கூறக்கூடிய செய்தியை ஏற்ற வகையில் நாம் இன்றைய நாளில் எத்தனையோ செய்திகளை அலைபேசி வழியாக இணையம் வழியாகவும் நாம் பகிர்ந்து கொண்டிருந்தாலும், நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கை தரக்கூடிய நல்ல வார்த்தைகளை நமது கடிதங்களாக இன்று எழுதவும் பரப்பவும் அழைக்கப்படுகிறோம். நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள் அடுத்தவருக்கு ஆறுதலைத் தருகிறது என்றால் அது ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்பிய தொடக்க திருஅவையில் திருத்தூதர்கள் எழுதிய மடல்களை படித்தபோது அங்கிருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு ஊக்கம் பெற்றார்களோ அதுபோல நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளை படிப்பவர்களும்நம்பிக்கை கொண்டு ஊக்கம் பெறுவார்கள், விழிப்போடு இருப்பார்கள். நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனுப்பும் குறுஞ்செய்தி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும். அத்தகைய ஆறுதலான தகவல்களை அனுதினமும் பகிர்ந்து கொள்ள இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் எத்தனையோ நிகழ்வுகளை பற்றி நாம் பேசுகிறோம். பகிர்கிறோம்ஆனால் இன்று நாம் பகிரக் கூடிய செய்தியானது அடுத்தவருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் துணிவையும் தருவதற்கான செய்திகளாக அமைந்திட நமது சொல்லிலும் செயலிலும் அடுத்தவர் நலனை மட்டுமே முன்னிறுத்தி அனைத்து விதமான அன்புப் பணிகளை ஆற்றிட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக