வெள்ளி, 28 மே, 2021

ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது.... (29.5.2021)

ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை  உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய வாசகங்கள் நம்மை தூய ஆவியானவரிடமிருந்து வெளிப்படக்கூடிய, தூய ஆவியின் கனிகளுள் ஒன்றான ஞானத்தை பெற்றுக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

ஞானம் அனைவராலும் விரும்பப்படக் கூடியது. 
ஞானம் சராசரி மனிதனையும் சாதனையாளனையும் வேறு படுத்திக் காட்டக் கூடியது. 

ஞானம் இறைவனிடமிருந்து வரக்கூடியது. அனுதினமும் பல வளர்ச்சிகளை காணும் நாம் ஞானத்தில் வளர்வது அவசியம்....

இன்று எப்படியாவது தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலையில் தான் பல குழந்தைகளும்,பேற்றோரும் உள்ளனர்.... இதை முழுமையான வளர்ச்சியல்ல என அறிந்தாலும் சமூக அந்தஸ்த்திற்காக இதை நாடுவோர் பலர் என்பது மறுக்க முடியாத உண்மை...

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது,  விவேகத்தோடும் ஞானத்தோடும் செயல்பட்டார், என்பதனை அவரது வாழ்வில் இருந்து அறியலாம். இன்றைய நற்செய்தியிலும்கூட இயேசுவிடம், எந்த அதிகாரத்தைக் கொண்டு நீர் இதை செய்கிறீர்? என்ற கேள்வி எழுப்பப்படும் போது ஞானமிக்கவராய் திருமுழுக்கு யோவானின் அதிகாரம் எங்கிருந்து வந்தது? என்று கேள்வியை எழுப்புகிறார். ஞானத்தோடு இருந்தமையால் இயேசுவின் கேள்விகள் பரிசேயரையும் சதுசேயரையும் வாயடைக்கச் செய்தது. என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் திகைப்புற்றாகள்.

 இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாமும் ஞானத்தோடு செயல்படும்போது, இவ்வுலகத்தில் அனைத்தின் மீதும் வெற்றி காண முடியும். 
ஞானம் நம்மை எப்போதும் உயர்த்தும். 
ஞானம் இறைவனிடமிருந்து வருகிறது. 
இறைவனிடம் இருந்து வரக்கூடிய ஞானத்தைப் பெற நாம் தகுதியானவர்களாக மாற முடியும். 
அதற்கு திறந்த மனம் வேண்டும்...
 ஞானி என்பவன் அனைவரிடத்திலும் கற்பவன் என்பார்கள்... சிறுவர், பெரியவர் வேறுபாடின்றி அனைவரிடத்திலும் சமூக அந்தஸ்து என்ற வீண் பெருமைகளை புறம்தள்ளி... குழந்தைகளின் முறையான வளர்சியை முன்னிருத்தி திறந்த மனதோடு கற்க நாம் முயல வேண்டும்...  

எனவே இன்றைய நாளில் தூய ஆவியாரின் வரங்களுள் ஒன்றான ஞானத்தினைப் பெற்று வாழ்வில்  சிறப்படைய இறையருளை வேண்டுவோம். ஞானத்தைப் பெறுவது நமது சுயலாபத்திற்காகவோ நன்மைக்காகவோ இருத்தல் ஆகாது. சாலமோனின் ஞானத்தைக் கொண்டு மக்களுக்கு நல்லதை எடுத்துரைக்கவும், அவர்களை நல்வழி நோக்கி அழைத்துச் செல்ல அதை பயன்படுத்தவும் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொண்டவர்களாய் இறைவனிடத்தில் ஞானத்தை வேண்டுவோம் இந்நன்நாளிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...