செவ்வாய், 25 மே, 2021

பணியாள் முதன்மை பெறுவோம்... (26.5.2021)

பணியாள்  முதன்மை பெறுவோம்...

பொதுக்காலம் 8வது வாரம் - புதன்
சீரா: 36: 1-2a, 4-5a, 9-17
மாற்: 10: 32-45.

அறம் செய்ய விரும்பும் அன்பு நண்பர்களே வணக்கம்

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
மார்க் 10 :45


 என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் அனைவரும் பணியாளராக இருப்பதற்கு அழைக்கப்படுகிறோம். பொதுவாகவே எல்லா இடத்திலும் முதன்மையான இடத்தை தேடக்கூடிய நாம் இன்றைய நாளில் முதன்மையான இடத்தை அடைவதன் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

ஒரு பள்ளியில் ஓட்டப்பந்தய போட்டியானது நடைபெற்றது. ...பந்தயத்தில் கலந்துகொள்ள பல குழந்தைகள் தயாராக இருந்தனர். ஒவ்வொரு குழந்தையும் முதலிடத்தைப் பெற வேண்டுமென  குழந்தையின் பெற்றோர்  உற்சாகமூட்டினார்கள்....
அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் எழுந்து நின்று ஆசிரியரிடம் சென்று நான் ஒலிபெருக்கி வாயிலாக  ஒரு கேள்வியை இங்கே கூடியுள்ள பெற்றோர்களிடத்தில்   கேட்க விரும்புகிறேன் என்றான். உடனே ஆசிரியரும் ஒலிபெருக்கியில் அவனை கேள்வியை கேட்க அனுமதித்தார். அவன் ஒலிபெருக்கி வாயிலாக அன்பார்ந்த பெற்றோர்களே அனைவரும் என்னை உற்று நோக்குங்கள் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. நீங்கள் எல்லோரும் உங்கள் குழந்தை முதலில் வரவேண்டும் என உற்சாகப்படுத்துகிறீர்கள். நீங்கள் செய்வதில் தவறு இல்லை நீங்கள் உங்கள் குழந்தையை முதன்மையான இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணுவதில் தவறில்லை. ஆனால் உங்கள் குழந்தை தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய ஒவ்வொரு குழந்தைகள் இடத்திலும் பதிந்தால் அவர்கள் அனைவரும் தாங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக அடுத்தவரை கண்டுகொள்ளாமலும் தன்னை மட்டுமே  முன்னுரிமை படுத்த கூடியவர்களாகவும் மாறிவிடுவார்கள் என எனக்குத் தோன்றுகிறது.  என்னுடைய எண்ணம் சரிதானா? என்றான். சிறுவன் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் சற்று நிமிடம் சிந்திக்க வைத்தது.

  பொதுவாகவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் முதன்மையான இடத்தை அடைய அனைவரும் ஆசைப்படுகிறோம். இன்றைய நற்செய்தியில் யாக்கோபும் யோவானும் முதன்மையான இடத்தை விரும்பினார்கள்.  ஆனால் முதன்மையான இடம் என்பது ஒரு பெருமையானது அல்ல மாறாக அந்த முதன்மையான இடம் என்பது தொண்டு செய்வதற்கான இடம் அடுத்தவரை இணைத்து, அழைத்துச் செல்வதற்கான ஒரு இடம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். எனவேதான் இயேசு உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என எண்ணுகிறார்.

நடைமுறையில் நாம் தேர்வு செய்கின்ற அதிகாரிகள் எல்லாம் நமக்கு பணி செய்வதற்காகத்தான் தேர்வு செய்கிறோம்.  ஆனால் தேர்வு செய்த பிறகு  அதை மறந்து போய் அவர்களுக்கு நாம் பணியாளர்களாக மாறுகிறோம்.ஆனால் இன்றும்  பணி செய்ய வந்தவர்கள் பலர்  தங்கள் பணியால் முதன்மையான இடத்தை பெறுபவர்களாக மாறுகிறார்கள்.

  நாம் நமது வாழ்வில் 
நேர்மையோடு ஒரு நல்ல பணியாளராக நாம் இருக்கும்பொழுது முதன்மையான இடத்தை நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை அந்த முதன்மையான இடம் நம்மை தேடி வரும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும். இந்த உண்மையைத்தான் இயேசு சீடர்களுக்கு கற்பித்தார் தன்னுடைய வாழ்வு மூலமாகவும் அதை அவர்களுக்கு  வெளிப்படுத்தினார்.  
இயேசுவுடன் பயணித்தாலும் போட்டிக்கும் பொறாமைக்கும் பஞ்சமில்லை இயேசுவின் சீடர்கள் இடத்தில்.எனவேதான் 
உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
மார்க் 10 :44 
என்ற வார்த்தைகளை இயேசு அழுத்தமாக சீடர்களுக்கு கூறுகிறார்.  முதன்மையான இடம் என்பது ஏதோ பெயர்,பொருள், பதவி, பட்டம் என புகழைத் தரும் என்ற எண்ணத்தோடு இருந்த சீடர்களுக்கு நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது பற்றிய தெளிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் எனச் சுட்டிக் காண்பித்து அவர்களுக்கு முதன்மையான இடத்தைப் பெறுவதற்கான வழியையும் கற்பிக்கின்றார். நம்மைப் பார்த்து நமது சொல்லின் படி வளரக்கூடிய நமது குழந்தைகளுக்கு நாம் முதன்மையான இடம் என்பது ஒரு பெயரையும், புகழையும் தரவல்லது ஆனால் அதேசமயம் இறுமாப்பையும் தரவல்லது என்பதை கற்றுக் கொடுப்போம். முதன்மையான இடத்தை அடைவதில் காணும் சுகத்தை விட முதன்மையான இடத்தை அடைவதன் நோக்கம் நாம் இச்சமூகத்தில் முன்மாதிரிகளான பணியாளராக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்போம். என் குழந்தை முதன்மையான இடத்தைப் பெற்றது என்பதைவிட என் குழந்தையால் பலர் முதன்மையான இடத்தை பெறுபவர்கள் ஆனார்கள் என்ற நிலையை உருவாக்க முயல்வோம்.  இத்தகைய பண்புகளோடு குழந்தையை வளர்க்க நமது இதயத்தில்  முதலில் இடம் வேண்டும். பணியால் முதன்மை பெறவேண்டும் என்பதை    இதயத்தில் இருத்தி வெற்று வாழ்வுக்கான முதன்மையான இடத்தை அடைவதற்கு ஆசை கொள்ளாமல் பொறுமையோடு நமது பணிகளை சிறப்பாக செய்து கொண்டு முன் செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம் அவ்வாறு செயல்படும்போது இன்றைய முதல் வாசகத்தில் நான் கேட்டது போல 

உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.
சீராக் 36 :16
என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இறைவன் நம்மை உயர்த்துவார் என்ற நம்பிக்கையோடு நாம் வாழும் இச்சமூகத்தில் நல்ல ஒரு பணியாளராக மாறுவோம் இயேசுவைப்போல்  பணியால் முதன்மையான இடத்தை பெறுவோம்.
இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பலர் தங்களின் பணிகளால் முதன்மையான இடத்தை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனுதினமும் செய்திதாள்கள் நமக்கு உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.  ஆங்காங்கே பலர் தங்களது பணியால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி பலரின் தேவைகளை நிவர்த்தி செய்து நல்ல ஒரு பணியாளராக செயல்பட்டு சமூகத்தில் முதன்மையான இடத்தை நோக்கி நகர்கிறார்கள். அவர்களுடன் நம்மை நாம் இணைத்துக் கொண்டு நமது பணியால் முதன்மையான இடத்தை பெற்றிட, நமது குழந்தைகள் பணியால் முதன்மையான இடத்தை அடைந்திட இறையருளை இன்றைய நாளில் வேண்டும். நமது வேண்டுதல் நமது செயலில் வெளிப்பட  இறைவன் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் முயற்சிக்கு துவங்குவோம்.

பணியாள் முதன்மையான இடத்தை பெறுவோம் மனமகிழ்வோடு வாழ்வோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...