நமது எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன.
இறைவன் இயேசுவில் அன்புக்கு உரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒருமுறை ஒரு மனிதன் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தான் அப்போது அந்த வழியாக வந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றது. அருகில் நின்று கொண்டிருந்த மனிதர்களிடம் இதையெல்லாம் யாரும் செய்ய மாட்டார்களா? என்று கோபமாக கத்தினான்;. அப்பொழுது அங்கு வந்த அடுத்த பேருந்தும் நிற்காமல் சென்றுவிட்டது. அப்போது அந்த மனிதன் அதிக கோபமடைந்து என்ன ஒரு அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் என்ன ஒரு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது? என்று மீண்டும் திட்ட ஆரம்பித்தான். பின்னர் மூன்றாவதாக அங்கு வந்து ஒரு பேருந்து நின்றது. அதில் ஏறி பயணித்தான் அந்த மனிதன். சற்று தூரம் சென்ற பின்னர், அந்தப் பேருந்து மற்றொரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்பொழுது அந்த மனிதன் நடத்துனரை பார்த்து, இந்த பேருந்து ஏன் எல்லா இடத்திலும்; நிற்கிறது? இந்த சிறிய நிறுத்தத்தில் எல்லாம் பேருந்து நின்றால் உரிய நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு சென்று சேர்வது தாமதமாகும் என்று பேருந்துக்குள்ளும் கத்தினான். முனித எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.
நமது எண்ணங்களே நம்மை வழிநடத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தி அறிவிக்க கூடிய சீடர்களுடைய எண்ணத்தை தங்களுடைய முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் புரிந்துகொண்டு நற்செய்தி அறிவிப்பவர்களை துன்புறுத்தும் பணியில் ஈடுபடும் பிலிப்பு நகர மக்களை நாம் காணலாம். அதுபோலவே சிறைக் கதவுகள் திறந்து இருந்தபோதும் தப்பித்து செல்லாமல் அங்கு இருந்த சீடர்களளுடைய நேர்மறையான எண்ணங்களை நாம் கண்டுகொள்ள முடியும். அதுபோலவே சிறையில் கைதிகள் இருக்கிறார்களா இல்லையா என்பதைச் பார்க்காது தங்களுடைய எண்ணத்தின் அடிப்படையில் அவர்கள் தப்பியதாக நினைத்துக்கொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயலும் படைவீரர்களுடைய எண்ணங்களையும் நாம் கணலாம். மேலும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை கேட்ட பிறகு மனம் மாறி தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யக்கூடிய படை வீரர்களின் செயல்களையையும் நாம் கண்டுகொள்ளலாம்.
மேலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது இறப்பு உயிர்ப்பை அறிவிக்கின்ற போது அதை தங்களுடைய முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் சிந்தித்து அதற்காக வருந்தும் சீடர்களுடைய எண்ணங்களை நாம் சீர்தூக்கிப் பார்க்கலாம். அதுபோலவே நாம் கொண்டிருக்கக்கூடிய நீதி பற்றிய எண்ணத்தையும் நம்பிக்கை பற்றிய எண்ணத்தையும் சுட்டிக்காட்டி நமது எண்ணங்களை சீர்தூக்கிப் பார்த்து இயேசுவின் பாதையில் பயணிக்க அன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார்.
நமது எண்ணம் போலவே நமது வாழ்வு அமையும் என மூத்தோர் கூறுவர். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமான எண்ணங்களை கொண்டு இருக்கிறோம். பல நேரங்களில் அடுத்தவருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்வதை விட நமது எண்ணங்களை மையப்படுத்தி நமது எண்ணங்கள்தான் அடுத்தவரின் எண்ணங்கள் என்ற முடிவுக்கு வந்து விடுகிறோம். எனவே பல நேரங்களில் நாம் துன்புறுகிறோம்.
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான் என ஓh ஆய்வு கூறுகிறது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எண்ண ஓட்டங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இன்று நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் மனங்களில் நம்பிக்கை என்பது குறைந்து அச்ச உணர்வே மேலோங்கி நிற்கிறது இந்நேரத்தில் இறைவன் நமது எண்ணங்கள் குறித்து சிந்தித்து செயல்பட நம்மை அழைக்கின்றார் நாம் எண்ணுவது போல தான் நமது வாழ்வு அமையும் நாம் நலமானதை எண்ணுவோம்.... நம்முள் இருக்கும் நல்லெண்ணங்கள் நமது வாழ்வை நலமானதாக மாற்றிட ஒருவர் மற்றவருக்காக இறையருளை இறைவனிடத்தில் வேண்டுவோம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக