வியாழன், 8 ஜூலை, 2021

தீமை செய்பவருக்கு நன்மை செய்யுங்கள் ...(10.7.2021)

தீமை செய்பவருக்கு நன்மை செய்யுங்கள் ...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 தீமை செய்பவருக்கு நன்மை செய்யுங்கள் என்ற பாடத்தை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்புக்கு தீங்கிழைத்தார்கள்.  ஆனால் யோசேப்பு அவர்களுக்கு பதிலுக்கு தீங்கிழைக்க விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கு நன்மையை செய்ததால் இன்று அவர் நினைவுகூரப்பட்டு கொண்டிருக்கிறார்.

இயேசுவும் இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தின் வழியாக, நமக்கு தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்யுங்கள் என கற்பிக்கின்றார். ஆம்! நாம் இந்த சமூகத்தில் நல்லதை  மட்டுமே விதைக்கக்கூடிய மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.

       இயேசுவும் தனது வாழ்வில் இதை கடைப்பிடித்தார்.   அவர் தனது இன்னுயிரை இழக்கும் நேரத்தில் கூட,  தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடினார். அவர்களை மன்னித்தார்.  இன்று அவர் நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கிறார். 
 நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நமக்கு எதிராக பலர் பல தீங்குகளை செய்தாலும்,  அதனை பொருட்படுத்தாது நாம் அவர்களுக்கு நல்லது செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.

 இன்னா செய்தாரை ஒருத்தல்                                        அவர் நாண 
நன்னயம் செய்துவிடல்.

     என்ற   வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப நமக்கு தீங்கிழைப்போருக்கும் நன்மை செய்வதற்கான மனப் பக்குவத்தை நாம் பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...