வாழ்வை எதிர்க்க கொள்ள துணிவோம்…
இயேசுவின் நண்பர்களே!
குருத்து ஞாயிறு என்றாலும் இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்;.
பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே.
இன்று இயேசு எருசலேம் நகரில் நுழைந்ததே தமதுப் சாவினை சந்திப்பதற்காகவே. இன்றைய முதல் இரண்டு வாசகங்களும் நற்செய்தியும் கிறிஸ்துவின் திருப்பாடுகளை நமக்கு நினைவூட்டுகின்றன. கிறிஸ்துவின் பாடுகளின் மறைபொருளை அறிந்து, நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளுடன் இணைத்து பார்க்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இந்நாளில் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் கோட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை உணர முயல்வோம்.
ஏன் இயேசு எருசலேம் செல்ல வேண்டம்?
இதுவரை இறைவாக்கினர் யாரும் எருசலேமில் மடிவதில்லை என்பதை இயேசு நன்கு அறிந்திருந்தார். ஆனால் தன்னால் அந்நிலையை பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞர்களும் தங்களின் சுயலாபத்தால் மாற்ற வல்லவர்கள் என்பதை நன்றாக அறிந்தே எருசலேம் நகருக்குள் இயேசு நுழைகிறார்.
ஏன் இன்றைய நாளில் இயேசு எருசலேமுக்குள் நுழைய வேண்டும்?
யூதர்களின் ஆண்டுகளில் ‘நிசான்’ என்னும் மாதம் மிகவும் முக்கியமானது. காரணம் அவர்களுக்கு இதுவே முதல்மாதம், இந்த மாதத்தின் பத்தாம் நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாள், அந்த நாளில் தான் யூதர்கள் தங்கள் பாஸ்கா விழாவினைக் கொண்டாடுவார்கள்.( வி.ப 12:2) இதில் பலியிடுகின்ற ஆட்டினை நான்கு நாட்களுக்கு முன்பாக தேர்ந்தெடுப்பார்கள் (லேவி 23) அதாவது குருத்து ஞாயிறான இன்று தான் மாசற்ற ஆட்டுக்குட்டியினை தேர்ந்தெடுத்து புனித வெள்ளியன்று பலியிடுவர். இயேசுவும் தன்னையே பலியிடப்படுகின்ற செம்மறியாக இந்நாளில் கையளிக்கின்றார். இதனால் தான் இயேசு இன்று எருசலேமில் நுழைகிறார்.
ஏன் இயேசு கழுதை மீது பயணம் செய்ய வேண்டும்?
இறைவாக்கினர் செக்கரியாவின் இறைவாக்கை நிறைவேற்றுகிற வகையில் கழுதையின் மீது இயேசு அமர்ந்து வருகிறார்.
கழுதை தாழ்ச்சியின் அடையாளம், ஒதுக்கப்பட்டவர்களின் சின்னம், அடிமையின் விலங்கு, அமைதியின் சிகரம், பொதுவாக வெற்றிப் பெற்றவர்கள் தன்னை அரசனாகக் காண்பித்துக் கொண்டவர்கள் குதிரையின்மீது தான் பவனி வருவார்கள் ஆனால் இயேசு அனைத்தையும் தலைகீழாக்க மாற்றப்போட்டவார். அதன் விளைவே கழுதை பயணம். மேலும் விரைவில் தாம் பலரால் எள்ளி நகையாடப்படுவதன் உருவகம்.
ஏன் மக்கள் ஓசன்னா கீதம் இசைத்தனர்?
இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டு பின் தொடர்ந்த மக்கட்கூட்டம் அவரை அரசராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனார். அவரை ஓர் அரசராக ஏற்றுக் கொண்டதை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்துகின்றன. வழிகளில் தங்கள் மேலுடைகளை விரித்து அரசருக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர்.
ஏன் ஒலிவமரகிளை பயன்படுத்தப்பட்டது?
ஒலிவமரம் என்றாலே வெற்றியின் அடையாளம். அதன் கிளைகளைத் தறித்து வெற்றிக்கீதம் பாடுகின்றனர். இதோ எம் அரசர் எருசலேமுக்குள் நுழைந்து விட்டார் என்று புகழ்கின்றனர். எனவே ஓசான்னா! ஓசான்னா என ஆர்ப்பரிக்கிறார்கள். இதை அனைத்தையும் பார்க்கின்ற பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர்கள் அதனை ஜீரணிக்க முடியவி;ல்லை.
இந்நிலையில் இயேசுவின் மனநிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என சிந்திக்கின்ற போது…
இந்த வெற்றியின் ஆர்பரிப்பு, இன்னும் சில நாட்களில் புலம்பலாக மாறும்…. என்பதையும்,
இந்த ஓசான்னா கீதம், ஒழிக என்ற குரலாக மாறி ஒழிக்கும்… என்பதையும்,
இந்த ஒலிவ மரத்தின் இலைகள், கிளைகள் அனைத்தும் முள்முடியாக மாறும்…. ஏன்பதையும்,
இவர்களின் ஆடைவிரிப்பு அனைத்தும் அவரின் ஆடையையே கழற்றிவிடுவதாக மாறும்… என்பதையும்,
கூட்டமாக பின் தொடர்ந்தவர்கள், தான் கைதுச் செய்யப்பட்ட பின்பு தம் பின்னால் ஒருவரும் நிற்கா வண்ணம் ஓடி மறைவாhர்கள்… என்பதையும்,
மக்களின் மத்தியில் அரசராக பவனி வந்தவர், இரு கள்வர்களின் நடுவில் அசைய முடியாமல் அறையப்பட்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் தொங்குவார்… என்பதையும் இயேசு நன்றே அறிந்திருந்தார். மரணத்தைக் கண்முன் கொண்டிருந்தாலும், தான் அடைய இருந்த இலக்கினை மிகத் தெளிவாக கடந்து சென்றாhர் இயேசு. இயேசு தன் வாழ்வில் போற்றலையும் தூற்றலையும் சமமாக எடுத்துக் கொண்டாhர். மனிதத்தின் பாவத்தின் விளைவாக கிடைத்த சாவினை வெற்றிக்கொள்ள சாவினை ஏற்க துணிந்தார்.
இந்த இயேசுவின் வாழ்வு இன்று நமக்கு தரும் பாடம் இயேசு வாழ்வின் எதார்த்தங்களை துணிவோடு சந்தித்து சாதித்ததுப் போல வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை இறைத்திட்டம் எனக்கருதி துணிந்து ஏற்க சிலுவையில் தொங்கும் இயேசுவை நமது மனக்கண்முன் இருத்தி வாழ்வை எதிர்க்க கொள்ள இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக