அன்பு சீடர்களாகிட...
உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
புதையலைக் கண்டுபிடித்த பொக்கிஷதாரரைப் போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவரை தேடிச்சென்ற பெண்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் ஆண்டவரை சந்திக்கச் சென்றதையும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவரைப் பற்றி அறிவிக்க ஆர்வ மிகுதியால் பெருமகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கிளம்பிய பொழுது, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அவர்களை சந்திக்கின்றார், அவர்களோடு உரையாடுகின்றார்.
அன்று ஆண்டவரை சிலுவையில் அறைந்த போது எண்ணற்ற மக்கள் அவரை சூழ்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவரை அடக்கம் செய்து விட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டார்கள். ஆண்டவரது இறப்பை காண வேண்டும், அவரை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் எல்லாம், ஆண்டவரது உயிர்ப்புக்கு பிறகும்கூட அவரைப் பற்றிய பேச்சை நாம் எவ்வாறு நிறுத்தலாம், இன்னும் அவரைப் பற்றிய தவறான செய்திகளை எவ்வாறெல்லாம் பரப்பலாம் என்பதை தமது தீய இதயத்தின் கண் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதிகாலையிலேயே ஆண்டவரது உயிர்ப்பினை காண வேண்டும்; அவரடு உரையாட வேண்டும் என்று ஆர்வத்தோடு ஆண்டவரைத் தேடிச்சென்ற பெண்கள், இன்று அவரது மாட்சியை கண்டுகொண்டார்கள். ஆண்டவரின் குரலைக் கேட்கும் பேறு பெற்றார்கள் அடுத்த நொடியில் தமது வாழ்க்கையில் ஆண்டவர் செயல்படுத்தவிருகின்ற நற்செய்தியை கண்டுகண்டார்கள்.
நாமும் நமது வாழ்வில், நமது புரணி பேசுகின்ற நேரங்களையெல்லாம் குறைத்துக்கொண்டு ஆண்டவரை தேடக்கூடிய நேரங்களை வலுப்படுத்தி, ஆண்டவரை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் சென்று அவரைக் கண்டு கொள்ள, நமது வார்த்தையாலும் வாழ்வாலும் ஆண்டவரது உயிர்ப்பை அறிவிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தொடர்ந்து வாழ்ந்து, அவரது அன்பு சீடர்களாகிட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக