இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களைப்பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தது. யூதாஸ் எப்படிப்பட்டவர்? அவரை நம்பலாமா? அவர் என்ன செய்யப்போகிறார்? என்பதையும் இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் யூதாசோடு தன் பயணத்தை தொடர்கிறார்.
இவ்வளவுக்கு யூதாசைப்பற்றித் தெரிந்தவர், ஏன் யூதாசிடம் முக்கியமானப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம்.
இயேசு யூதாசுக்கு திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி தருகிறார். ஆனால் யூதாசு கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறிது, சிறிதாக பயன்படுத்தி தன்னையே கறைபடித்துக்கொள்கிறார்.
அதுபோலவே பரிசேயர்களும் இலாசரை உயிர்த்தெழச்செய்த நிகழ்ச்சி வாயிலாக ஏராளமான யூதர்கள் மனம் மாறினார்கள். அவர்கள் இயேசுவில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்கள். இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்வது, அதிகாரவர்க்கத்தினருக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்த தொடங்கியது. அதற்காக அவர்கள் இலாசரை கொல்வதற்கும் துணிந்து விட்டார்கள். இயேசு செய்த அரும் அடையாளங்களைக் கண்டும், இயேசுவின் போதனை மற்றும் வாழ்வு அடிப்படையில் தங்கள் வாழ்வை சரியான பாதையில் அமைத்துக் கொள்வதற்கு பதிலாக கரை படுத்துக் கொள்ளக் கூடியவர்கள் ஆகவே பரிசேயர்களும் செயல்பட்டார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இந்த இறைவார்த்தை பகுதிகள் என்று நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது நாம் ஒவ்வொருவருமே இயேசுவின் மனநிலையை கொண்ட மனிதர்களாக இருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது தன்னோடு இருப்பவன் தன்னை காட்டிக் கொடுப்பான் என அறிந்திருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவனும் மீட்புப் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசு செயல்பட்டார். தனக்கு எதிராக எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருந்த பரிசேயர்களும் சதுசேயர்கள் மறைநூல் அறிஞர்களும் தங்கள் தவறான வாழ்வை மாற்றிக் கொண்டு இறைவனின் மக்களாக செயல்பட வேண்டும் என்பதே இயேசுவின் வாழ்வும் பணியும் நமக்கு வெளிப்படுத்துகிறது.
மரியாவின் திருத்தலம் பூசுதல் இயேசுவின் இறப்பை நினைவுத்துவது போல நம் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு நன்மை தனங்களும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்னும் நம்மை அதிகமாக அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன. வழிகாட்டும் இறைவனின் வாழ்க்கை வழித்தடத்தில் பயணம் செய்கின்ற நாம் ஒவ்வொருவருமே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மனநிலையை நமது மனநிலையாக கொண்டு வாழ இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக