இன்றைய வாசகத்தில் இயேசுவுக்கும் யூதர்களுக்கும் இடையே விடுதலை குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் விவாதம் நடக்கிறது
கடவுளின் வார்த்தை அவர்களுக்கு விடுதலை அளிக்கும் என்கிறார் இயேசு. அவர்களோ "நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை என்கின்றனர். இயேசுவோ "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று சொல்லி, அவர்களின் அறிவுக்கு கண்களைத் திறக்க முயல்கிறார்.
ஆபிரகாமின் வழிமரபினரான யூதர்கள் பல ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாய் இருந்தனர், பின்னர், பாபிலோனுக்கு அடிமைகளாய் நாடு கடத்தப்பட்டனர். இயேசுவின் காலத்தில்கூட அவர்கள் உரோமைப் பேரரசின் அடிமைகளாய்த்தான் இருந்தனர். இந்த உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்ததே அவர்களின் பொய்மையின் அடிமை என்பதைக் காட்டுகிறது.
எனவேதான், இயேசு அவர்களுக்கு நினைவூட்டுகிறார், "பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை" என்று. அந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு இந்த உலகிற்கு வந்தார்.
ஆனால் யூதர்கள் இயேசு கொண்டு வந்த விடுதலையை அறியவுமில்லை, அதனைப் பெற விரும்பவுமில்லை. ஆனால், கிறித்தவராகிய நாம் இயேசு சொன்ன வார்த்தைகளை அறிந்திருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் பாவங்களுக்கும், அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இந்த உண்மையை அறிக்கையிட்டு, இயேசுவின் மன்னிப்பையும், விடுதலையையும் இத்தவக்காலத்தில் பெற்றுக் கொள்ள முயல்வோம் அதற்கான அருளை வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக