திங்கள், 4 அக்டோபர், 2021

கடமைப்பட்டிருக்கிறோம்...(11.02.2022)

கடமைப்பட்டிருக்கிறோம்...

 இயேசுவில் அன்புக்குரியவர்களே! 





    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.



    இன்றைய நாளில் காது கேட்காத ஒருவரை  ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது வல்லமையால் அவரது செவியை திறக்கிறார். அதே இறைவன் இன்று நம் உள்ளங்களையும் திறக்கிறார்.  ஆண்டவரால் காதுகள் திறக்கப்பட்ட நபர்,  நா கட்டவிழ்ந்து ஆண்டவரைப் பற்றிப் பறைசாற்ற தொடங்கினார்.


    அனுதினமும் இறைவார்த்தையைக் கேட்கின்ற  நாம், அந்த இறைவார்த்தையை நமது வாழ்வாக மாற்றுகிறோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை வெறுமன கேட்டுவிட்டு நகர்பவர்களாக இல்லாமல், கேட்ட இறைவார்த்தைகளை செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக மாறிட இறையருளை வேண்டுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்... (8.8.2025)

உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்...  சிலுவையின் வழி மீட்பு... 1. கடவுளின் அற்புதமான அழைப்பு இன்றைய முதலாவது வாசகம் வழியாக இஸ்ரே...