இயேசுவின் பாதையில்....
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் இந்த சமூகத்தில் நாம் ஒரு நல்ல தலைவர்களாக விளங்கிட வேண்டும் என்ற பாடத்தை நமக்கு தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் கடவுளின் கையில் சிறப்பு மிக்கவர்கள் நாம் என்ற செய்தியானது வழங்கப்படுகிறது. கடவுளால் இம்மண்ணில் படைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு இணைந்து அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் வாழுகின்ற போது சிறப்பு மிகுந்தவர்களாக அதாவது சிறந்த தலைவர்களாக இச்சமூகத்தில் வலம் வர முடியும்.
இன்றைய நாளில் இரண்டாம் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே ஒப்புயர்வற்ற தலைவன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அவரது இரக்கமும் தியாகமும் முன்னிறுத்தி காட்டப்படுகின்றது.
இன்றைக்கு நாளில் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் பார்க்கின்றபோது இயேசுவோடு இருந்த சீடர்கள் இயேசுவைப் போல இந்த சமூகத்தில் நல்லதொரு முன்மாதிரியாகவும், அடுத்தவர் நலனை முன்னிறுத்த கூடிய சிறந்த தலைவர்களாகவும் உருவாக்குவதற்கு பதிலாக உலக இச்சைகளுக்கு அடிமையாகி போனவர்களாய் பதவியையும், முதன்மையான இடத்தையும் விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களின் உள்ள எண்ணத்தை அறிந்தவராய் இந்த சமூகத்தில் அடுத்தவர் நலன் காக்கும் நல்ல தலைவர்களாக எந்தவித முன் சார்பு எண்ணமும் இன்றி மக்களின் நலனை முன்னிறுத்தக் கூடிய அடுத்தவருக்காக வாழ்வை இழக்க கூடிய நல்ல தலைவர்களாக மாறிட வேண்டும் என்ற பாடத்தை அவர்களுக்கு கற்பிக்கின்றார்.
அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு கற்பித்த பாடத்தை தான் இன்றைய நாளில் நாமும் கற்றுக்கொள்ள அழைக்கப்படுகின்றோம். நாம் வாழும் இந்த உலகத்தில் எப்போதும் பணம் பதவி பட்டம் என உயரிய இடத்தை விரும்பக் கூடியவர்களாக இருக்கின்றனர். நமது வாழ்வை சுய ஆய்வு செய்து பார்ப்போம். நாம் பிறந்த நாளிலிருந்து இந்நாள் வரை நமது வளர்ச்சியில் நமது உருவாக்கத்தில் பலர் தங்கள் பங்களிப்பைத் தந்து இருக்கிறார்கள். ஆனால் நம்மாள் வளர்ந்தவர்கள் யார்? நம்மாள் ஊக்கப் படுத்தப் பட்டவர்கள் யார்? நம்மாள் உருவான தலைவர்கள் யார் ? என சிந்திக்க இன்று அழைக்கப்படும் பல நேரங்களில் நமது சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி நாம் இந்த சமூகத்தில் பலவிதமான உதவிகளை செய்கிறோம். அடுத்தவர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். அடுத்து வரும் நம்மை போல் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு உயரிய இலக்கோடு ஒரு நல்ல தலைவனுக்குரிய பண்புகளை கொண்டவர்களாய் இந்த சமூகத்தில் நாம் உருவாக்க வேண்டும்.
நாம் எத்தகைய மாற்றத்தை எல்லாம் இதுநாள் வரை விதைத்திருக்கும் சிந்தித்துப் பார்ப்போம். அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்களின் உண்மை அர்த்தத்தை உணர்ந்து கொண்ட சீடர்கள் இறைவார்த்தையின் அடிப்படையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு தங்களுக்கு முன்மாதிரியாக இருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்விலும் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்த கூடியவர்களாக மாறினார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்றும் 2000 ஆண்டுகளுக்கு பின்னும் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றி அவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக்கொள்ள விருக்கிறோம் என்று அனுதினமும் இந்த உலகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சார்ந்தவர்கள் நாம் என சொல்லிக்கொண்டு பயணம் செய்கின்ற நாம் நமது வாழ்வில் இந்த இயேசுவைப் பிரதிபலிக்கிறோமா? நாம் நமது வாழ்வில் நல்ல தலைவர்களை உருவாக்கிய இருக்கின்றோமா? நாமே நல்ல தலைவர்களாக இருக்கின்றோமா? கேள்விக்கணைகளை நமது உள்ளத்தில் எழுப்பி நல்லதொரு மாற்றத்தை நாம் உள்வாங்கிக் கொள்வோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போல அடுத்தவருக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடிய நல்ல தலைவர்களாக இந்த சமூகத்தை உருவாக்கிட இன்றைய நாள் அழைக்கப்படுகின்றது. அழைக்கின்ற இறைவன் குரலுக்கு செவி கொடுத்து அடுத்தவர் நலனை முன்னிறுத்தும் நல்ல தலைவர்களாக மாறிட இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம். நல்ல தலைவன் இயேசுவின் பாதையில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக