இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்பம் துன்பம் என எல்லாச் சூழ்நிலையிலும் இறைவனது வார்த்தைகள் நமது வாழ்வாகட்டும் என்ற செய்தியினை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் பலர் நமக்கு எதிராக கிளர்ந்தெழுந்து, நம்மோடு இருந்தவர்கள் நமக்கு எதிராக துரோகங்கள் பல இழைத்தாலும், எல்லாச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காது, இறைவனது வார்த்தைகளை மனதில் இறுகப்பிடித்துக்கொண்டு ஆண்டவருக்கு உண்மை சீடர்களாக..... இந்த சமூகத்தில் பலவிதமான துன்பங்களுக்கு மத்தியில் இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக நாம் வாழ்ந்திட வேண்டும். அவ்வாறு வாழுகின்ற போது நாம் இந்த சமூகத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்க கூடியவர்களாக இருக்கமுடியும். ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம் எனக் கூறுகின்ற நாம் நமது வாழ்வில் அவரது வார்த்தைகளை செயலாக மாற்றும் பொழுது தான் இறை வார்த்தைக்கு உயிர் தரக் கூடியவர்களாக மாறுகிறோம். இறை வார்த்தைக்கு உயிர் தர வேண்டும் என்றால் இறைவார்த்தை நமது செயலாக வேண்டும்....
இறைவனது வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொள்ள எல்லாச் சூழ்நிலையிலும் அந்த இறைவன் தானே நமக்கு வலிமை தர வேண்டுமென இன்றைய நாளில் இறைவனிடத்தில் அவரது வார்த்தைகளை நாம் வாழ்வாக்கிக்கொள்ள அருள்வேண்டி இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக