விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
விருப்பப்படி வாழ அல்ல அவர் (இயேசு) விரும்பும்படி வாழவே...
இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன...
இன்றைய முதல் வாசகம் நாம் நமது உடலை கொண்டு எவ்வாறு வாழ வேண்டும்? என்ற செய்தியினை வலியுறுத்துகிறது. பாவம் நம்மை ஆட்சி செய்யாதவாறு நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். நமது சுய விருப்பு வெறுப்புகளை மட்டுமே மனதில் கொண்டு பயணிப்பதை விட்டுவிட்டு ஆண்டவரின் விருப்பம் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய முதல் வாசகம் வழங்குகிறது. இதற்கு மெருகூட்டும் வகையில் தான் இன்றைய நாளின நற்செய்தி வாசகம் அமைகிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரது பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் இந்தச் சமூகத்தில் இயேசுவாக மாறிட, இயேசுவாக செயலாற்றியட அழைக்கப்பட்டவர்கள்.
இந்த இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது
ஏழை எளியவரின் சார்பாக நின்றார்.... துன்பத்தில் வாழ்வோரின் துயர் துடைப்பவராக இருந்தார்....
அழுகையில் தவிப்போருக்கு ஆறுதலாக இருந்தார்....
எல்லோருக்கும் எல்லாமுமாய் சமூகத்தில் சமத்துவத்தையும், சமூக நீதியையும் நிலைநட்ட கூடியவராக இருந்தார்.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நமது வாழ்வின் இவையெல்லாம் மேலோங்கி காணப்படுகிறதா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் நமக்குளாக எழுப்பி பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
தன்னை பின் செல்கின்ற மக்களை சந்திக்க இறைவன் வருகின்றபோது நாம் அவர் ஏற்றுக்கொள்ள கூடிய மக்களாக இந்த சமூகத்தில் இருக்க வேண்டும்..இதையே இன்றைய நற்செய்தி வாசகம் வலியுறுத்துகிறது.
தலைவர் வந்து சந்திக்கின்ற போது பொறுப்புடன் பணியாற்றும் பணியாளரை போல் நம்மை சந்திக்க ஆண்டவர் வருகின்றபோது அவர் நம்மை ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் பொறுப்புடன் நாம் இச்சமூகத்தில் அவரைப்போல் செயலாற்ற வேண்டும். அதற்கு நமது சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாது, ஒவ்வொருநாளும் அடுத்தவர் நலனை மனதில் இருத்தி, பிறருக்கான நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் சீடர்களாக சமூகத்தில் நாம் விளங்கிட வேண்டும்.
மிகுதியாக கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.... மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே கேட்கப்படும் என்ற வார்த்தைகள் மனதில் இருத்தி நமது வாழ்வில் நாம் ஆண்டவர் இயேசுவுக்கு ஏற்ற வகையில் அவரது திருவுளத்தை நிறைவேற்றும் மக்களாக வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 6:19
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்கிறார்....
இந்த உடலாகிய ஆண்டவரின் ஆலயத்தை கொண்டு நாம் விரும்பியபடி வாழாது அவரது (இயேசுவின்) விருப்பப்படி வாழ கூடியவர்களாக மாறிட இன்றைய நாளில் தொடர்ந்து இறைவனிடத்தில் வேண்டுவோம் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக