விழிப்போடு செயல்பட....
மண்ணில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் இந்த உலகத்தில் பலவிதமான பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன நாம் நமது பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் விழிப்பாய் இருந்த ஒரு பணியாளன் குறைத்த உவமையை இயேசு குறிப்பிடுகிறார். இந்த உவமை வழியாக இயேசு தருகின்ற செய்தி... எந்த நேரத்திலும் நாம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்ய வேண்டியவர்கள் ஆய் இருக்க வேண்டும் என்பதாகும். இந்த உலகத்தில் நாம் செய்கின்ற அனைத்து இருக்கும் இரண்டு விதமான சாட்சிகள் உண்டு. ஒன்று இறைவன் மற்றொன்று நமது மனசாட்சி. இந்த இருவருக்கு மட்டும் தான் தெரியும் நாம் எந்த எண்ணத்தோடு எந்த மனநிலையோடு இந்த சமூகத்தில் நாம் ஒரு செயலை செய்து கொண்டிருக்கின்றோம் என்று. இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் தருகின்ற பாடமும் அதுதான். நாம் செய்கின்ற பணிகளையும் பொறுப்புக்களையும் நமது கடமையை உணர்ந்து இறைவனை முன்னிறுத்தி திறம்படச் செய்வதற்கு இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம்.
இன்று கடமையைக் கூட கடமைக்காக செய்பவர்கள்தான் அதிகமாக இருக்கின்றார்கள் ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் நாம் பொறுப்புணர்வோடு எப்போதும் விழிப்பாய் இருந்து ஆண்டவர் இயேசுவுக்கு புகுந்த வாழ்வை வாழ நமக்கு அழைப்பு தருகின்றன.
இயேசு இந்த மண்ணில் மனிதனாக பிறந்து தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதை மட்டுமே மனதில் கொண்டு அப்பணியை ஆற்றுவதில் விழிப்போடு இருந்து திறம்பட அதனைச் செய்து நாமும் அவரைப் போல எல்லா சூழ்நிலையிலும் விழிப்போடு இருந்து இறை விருப்பத்தை நிறைவேற்ற கூடியவர்களாய் நமக்கென இச்சமூகத்தில் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்திட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக தருகின்றார்.
இறைவன் உணர்த்துகின்ற பாடத்தை உணர்ந்து கொண்டு வாழ்வில் நாம் நல்லதொரு இயேசுவின் சீடர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக