இந்த உலகத்தில் நிலையானது எது?
கடவுள் ஒருவரே. அவர் ஒருவரையே பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் ஒருவருக்கே அஞ்சுங்கள், என்ற செய்திதான் இன்றைய வாசகங்களின் மையமாக நமக்கு தரப்படுகிறது.
ஒரு மயில் இறகு ஒன்று காற்றில் பறந்து வந்தது. அது ஒரு ஓவியனுடைய கையில் கிடைத்தது. அந்த ஓவியன் அதை எடுத்து ஒரு அழகிய படத்தை அதை பயன்படுத்தி வரைந்தான். பின்னர் அந்த மயில் இறகு மீண்டும் காற்றில் பறந்து வந்து ஒரு மருத்துவனுடைய கையில் கிடைத்தது. அதை எடுத்து அவன் எண்ணெயை தொட்டு காயத்திற்கு மருந்திட்டான். அதே மயிலிறகு மீண்டும் காற்றில் பறந்து சென்றது. இறுதியில் அது ஒரு இளைஞனுடைய கையில் கிடைத்தது. அவன் அதில் சில பகுதிகளை சரிசெய்து தனது காதுகளைக் குடைந்து கொண்டான்.
ஒரே இறகு தான், ஆனால் அதனை ஒவ்வொருவரும் பயன்படுத்திய விதம் வெவ்வேறாக இருந்தது. ஆண்டவர் ஒருவரே. அந்த ஆண்டவர் ஒருவருக்கே நாம் இந்த சமூகத்தில் அஞ்ச வேண்டும். அவர் ஒருவரையே நாம் ஆழமாக் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். அவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டு இந்த சமூகத்தில் நாம் நலமான நல்ல பணிகளைச் செய்ய வேண்டும். இந்த ஆண்டவர் எங்கோ இருப்பவர் அல்ல. இவர் எப்போதும் நம்மோடு இருப்பவர்.
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற மத்தேயு 28:20, இறைவார்த்தைகளுக்கு ஏற்ப, எப்போதும் நம்மோடு இருப்பவர். நூம் அஞ்ச வேண்டியதும் அவர் ஒருவருக்கு மட்டுமே. அஞ்ச வேண்டிய ஆண்டவரை விட்டுவிட்டு இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு அஞ்சி அவர்களின் வழியில் நடக்கக் கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் இம்மண்ணில் இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் கூட ஆண்டவரை மட்டும் மனதிறக் கொண்டு நம்பிக்கையோடு தன் பணயத்தை மேற்கொண்ட ஆபிரகாமை ஆண்டவர் நீதியோடு நோக்கினார் என்று பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
நாம் வாழும் இவ்வுலகத்தில் பொதுவாக இந்தச் சமூகத்தில் தீமைகள் வளர்வதற்கான காரணம் தீமை செய்வோர் தீமை செய்து கொண்டே இருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல மாறாக நல்லவர்கள் பலரின் மௌனமும் தேவையற்ற அச்சமுமே காரணம் என்பார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவருக்கு மட்டுமே என்பதை எடுத்துரைப்பதன் வழியாக தேவையற்ற அச்சங்களை கலைந்து எப்போதும் நம்மோடு எல்லாச்சூழலிலும் உடனிருக்கும் ஆண்டவரை மனதிற் கொண்டு துணிவோடு வாழ அழைப்பு தருகிறது.
இந்த இறைவனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? இந்த இறைவனை பயன்படுத்தி இந்த சமூகத்தில் நல்ல செயல்களைச் செய்கிறோமா? அல்லது அவரைக் கண்டும் காணாமல் நகர்ந்து செல்கிறோமா? அல்லது நமது தேவைக்கு மட்டும் அவரை பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றோமா? கேள்வி உங்கள் முன்னால். பதில்களை நீங்களே சுய ஆய்வு செய்து, தெரிந்து கொள்ளுங்கள். இனி வருகின்ற நாட்களில் நம்மோடு என்றும் இருக்கும் இறைவனை உணர்ந்துக் கொண்டு, இச்சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க, இறையருளை வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக