நன்மை செய்து வாழ்வோம் ...
மனிதர்களாகிய நாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களுக்கும் இரண்டு விதமான சாட்சிகள் உண்டு.
ஒன்று இறைவன்,
இரண்டாவது நமது மனசாட்சி
இந்த இரண்டு சாட்சிகள் தான் நாம் நமது வாழ்வில் எப்போதும் நேர்மையாகவும், காலம், நேரம், இடம் இவைகளை காரணம் காட்டி நல்லது செய்வதை தள்ளிப் போடாது எப்போதும் அடுத்தவருக்கு நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நம்மை வாழ வைக்கின்றன.
மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருடைய மனதிற்குள்ளும் நன்மைகளும், தீமைகளும் நிறைந்திரக்கின்றன. ஒருவரின் பார்வையில் சரி எனப்படுவது மற்றவரின் பார்வையில் தவறாகப் படுகிறது. ஒருவரின் பார்வையில் தவறு எனப்படுவது மற்றவர்களின் பார்வையில் சரி எனப்படுகிறது. எப்போதும் எல்லார் பார்வையும் ஒரே கோணத்தில் இருப்பதில்லை காரணம் மனிதர்களாகிய நாம் எண்ணங்களால் அனுபவங்களால் மாறுபட்டு இருக்கின்றோம்.
மாறுபட்ட நிலையில் இருந்தாலும் நமது மனதிற்குள் எப்போதும் அடுத்தவருக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி காணப்பட வேண்டும்.
இயேசு தனது வாழ்வில் எப்போதும் நன்மை செய்யக் கூடிய நபராக இருந்தார். இன்று கூட நற்செய்தி வாசகத்தில் நீர்க்கோவை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணிக்கு ஓய்வுநாளில் இயேசு குணம் தருவதை நாம் வாசிக்க கேட்டோம். நன்மை செய்வதற்கு நேரம் காலம் வரவேண்டும் என காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பதைக் கொண்டு எல்லா நேரத்திலும் நன்மை செய்து நம்மால் வாழ முடியும். இத்தகைய வாழ்வை வாழவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. நமக்குள் இருந்து செயலாற்றும் தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து கடவுளுக்கும் மனசாட்சிக்கும் ஏற்புடைய வகையில் ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல நன்மை செய்து வாழ இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக