அன்பு செய்து வாழ்வதே நம் இலக்கு ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இருபதில்- இளைஞன்
முப்பதில் - முறுக்கு
நாற்பதில் - பொறுப்பு
ஐம்பதில் - ஆசை
அறுபதில் - ஓய்வு
எழுவதில் - ஏக்கம்
என்பதில் - எதிர்பார்ப்பு
தொன்னூறில் - நடுக்கம்
நூறில் - அடக்கம்
இவ்வாறு பத்து பத்தாக மனித வாழ்வை குறித்து பார்க்கலாம்.
10 வயது வரை குழந்தையாக கருதப்படுகின்ற நாம். இருபது வயதை தொடுகின்ற போது இளைஞனாக பார்க்கப்படுகிறோம்.
30 வயதில் எதையும் சாதிக்க வேண்டும் என்ற முறுக்கேறிய பருவத்தில் இருக்கின்றோம்.
40 வயதில் இன்னும் சிறிது காலமே இருக்கிறது அதற்குள் நமது பொறுப்புகளை எல்லாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கின்றோம். 50 வயதில் ஆசைப்படுகின்றோம். எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும். குழந்தைகளுக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்றவாறு ஆசைப்படுகிறோம்.
60 வயதில் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஓய்வு தரப்படுகிறது.
70 வயதில் ஏங்குகிறோம். நன்றாக இருந்த போது இதை செய்திருக்கலாம். அதை செய்திருக்கலாம். இதை இப்படி செய்திருக்கலாம். அப்படி செய்திருக்கலாம் என்றவாறு ஏக்கங்களின் அடிப்படையில் நகர்கின்றோம்.
80 வயதைத் தொடும்போது அடுத்தவரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
90 வயதில் உடல் முழுவதும் நடுக்கத்தோடு நகர்கின்றோம்.
100 வயதில் அடக்கம் செய்யப்படுகின்றார்.
இவ்வாறு வாழ்க்கையை பத்து பத்தாக புகைப்பார்கள் ஆனால் என்று அறுபதைத் தொடுவதே அதிசயமாக பார்க்கப்படுகின்ற நிலை தொடர்கின்றது.
இந்த மண்ணுலக வாழ்வில் மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட இருக்கின்றோம். உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் மற்றவரை கடவுளின் உருவமாகவும் சாயலாகவும் கருத்தை ஒருவர் மற்றவரை அன்பு செய்து ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய மனிதர்களால் வாழ இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் இரண்டு கட்டளைகள் தரப்படுகின்றன.
ஒன்று இறைவனை அன்பு செய்வது.
மற்றொன்று அடுத்து இருப்பவரை அன்பு செய்வது.
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் நிமிர்த்தமாக கடவுளை அன்பு செய்வது என்பது நம்மில் எப்போதும் வேரூன்றி இருக்கின்றது. ஆனால் அடுத்தவரை அன்பு செய்வதில்தான் பல சிக்கல்களை நாம் சந்திக்கின்றோம்.
அனைவரும் ஆண்டவரின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாய் இருக்கின்றபோதும், நாம் நம் அருகில் இருக்கின்ற அடுத்தவரை அவர் இருப்பது போலவே ஏற்றுக் கொள்வதற்கும், அன்பு செய்வதற்கு பதிலாக பல நேரங்களில் நமது விருப்பங்களின் அடிப்படையில் அவர்கள் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாய் செயல்படுகின்றோம். நமது விருப்பப்படி அவர்கள் இல்லை என்றால் அவர்களை ஏற்றுக் கொள்ள தயங்குகின்றோம்.
உண்மையான அன்பு என்பது அடுத்தவரை அவர் இருப்பது போல ஏற்றுக்கொள்வதாகும். அதிலும் குறிப்பாக அடுத்தவரை அன்பு செய்வது குறித்து ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகின்ற போது உன்னை நீ அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவர் அன்பு செய்யுங்கள் என்கிறார்.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமக்கு எதிராக யாரும் தீங்கு நினைக்க கூடாது என எண்ணுகிறோம். நாம் வாழ்வில் இன்னல்களையும், இக்கட்டான சூழ்நிலைகளையும் யாரும் நமக்கு பரிசாக தந்து விடக் கூடாது என எண்ணுகிறோம். அதே எண்ணம் நம்மிடமும் இருக்க வேண்டும். அதே எண்ணத்தோடு அடுத்தவரையும் நாம் நோக்க வேண்டும். இதையே இறைவன் இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகின்றார்.
மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் அனைவரும் நம்மை அன்பு செய்ய வேண்டும் என எண்ணுகின்றோம். ஆனால் நாம் அனைவரையும் அன்பு செய்கின்றோமா? என்ற கேள்வியை இன்றைய நாளில் நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம்.
இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் ஒருவர் மற்றவரை அவர்கள் இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு, எல்லா நேரத்திலும் அவர்களோடு இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கக் கூடியவர்களாக வாழ வேண்டுமென்பதுதான் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி. இறைவன் தருகின்ற செய்திக்கு செவி கொடுத்து, நாம் நமது வாழ்வில் நம் அருகில் இருக்கக்கூடியவர்களை நமது சுய விருப்பு, வெறுப்புகளை எல்லாம் புறம்தள்ளி இம்மண்ணில் வாழுகின்ற காலத்தில் அவர்கள் அனைவரையும் அன்பு செய்யக்கடியவர்களாக வாழ இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேவேண்டுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக