எதிலும் நம்பி கை வைக்க என்ன தேவை ?...
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்....
நம்பிக்கையோடு வாழ்வதற்கு இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. பரபரப்பான இந்த உலகத்தில் பல பணிகளுக்கு மத்தியில் அனுதினமும் விரைந்து சென்று கொண்டிருக்க கூடிய நாம் சற்று நிதானமாக நின்று நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை உரசிப்பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
நம்பிக்கையின் தந்தையாக விளங்கிய ஆபிரகாமை உதாரணமாக கொண்டு இன்றைய முதல் வாசகம் அமைந்திருக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்பிக்கையோடு ஆண்டவர் ஏசு கிறிஸ்துவுக்கு சாட்சியம் சொல்ல கூடியவர்களாய் நாம் வாழுகின்ற போது அவர் நமக்கு சான்று பகர கூடியவராக இருக்கிறார் என்ற செய்தியினை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்றது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலையும் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கையோடு இருக்கின்ற போது இந்த உலகத்தில் பலவிதமான நலமான நல்ல பணிகளை நாம் முன்னெடுக்க முடியும். அத்தகைய பணிகளை முன்னெடுப்பதன் வழியாக ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய இறையாட்சியை இந்த மண்ணில் மலரச் செய்ய முடியும்.
நம்பிக்கை இருந்தால்......
எதிலும் நம்பி கை வைக்கலாம்..... என கூறுவார்கள் நம்பிக்கையோடு இந்த உலகத்தில் அனுதினமும் பல நல்ல பணிகளை முன்னெடுக்க தூய ஆவியானவர் நம்மை வழிநடத்த வேண்டும் என இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம். மேலும் இறைவன் தாமே நம்மோடு இருந்து நம் மூலமாக சமூகத்தில் பலவிதமான நல்ல காரியங்களை முன்னெடுக்க கூடிய ஆற்றலை நமக்கு தர வேண்டும் என இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக