வாக்கு மாறாத கடவுள்...
அன்பர்களே! என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நடக்கும் நிகழ்வுகளை கொண்டு காலத்தை அறிந்து கொள்வது போல, கடவுளின் வார்த்தைகளைக் கொண்டு அவரின் வருகையை அறிந்து கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம்.
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. ' என்ற இந்த இறைவன் வாக்கு மாறாத கடவுள் என்பதை விவிலியத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடியும்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.
என்ற யோவான் 1:1 ஏற்ப...
வாக்குறுதியின் கடவுளான இவரது வாக்குறுதிகள் என்றும் பொய்ததுப் போகாது...
எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னைப் பின் தொடர்... நீ காணுகின்ற நாட்டை நான் உனக்கு உரிமைச் சொத்தாக்குவேன்... கடற்கரை மணலை போல உன் மக்கள் இனங்களை பெருகச் செய்வேன்... என்ற ஆண்டவரின் வார்த்தைகள் ஆபிரகாமின் வாழ்வில் நிறைவேறியதை நாம் அனைவரும் அறிவோம்.
அதுபோல முதிர்ந்த வயதில் பிள்ளை பெற முடியாத நிலையில் இருந்த சாராவை பார்த்து அடுத்த மாதம் இதேநாளில் நீர் ஒரு மகனைப் பெற்றெடுப்பீர் என்று கூறியபோது தன் நிலையை உணர்ந்தவளாக சாராள் சிரித்தாள் ஆனால் ஆண்டவரின் வார்த்தை மெய்யானது....
இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு தருகின்ற வாக்குறுதி அவரது இரண்டாம் வருகையை பற்றியதாகும்....
வாக்குறுதியின் கடவுளான இறைவன் நம்மை மீண்டும் சந்திக்க வருவதாக குறிப்பிடுகின்றார். அவர் வருகின்ற போது அவரது வாக்கின பின்பற்றும் மனிதர்களாக நாம் இச்சமூகத்தில் வாழக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதுவே இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.
வாக்கு மாறாத கடவுள் நம்மை சந்திக்க மீண்டும் வருவார் நம்மை சந்திக்க வருகின்ற அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் நாமும் அவரது ஆட்சியிலும், மாட்சியிலும் பங்குபெற நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக