பரிவு காட்டிட...
நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து நோயையும் பசியையும் போக்கி மனித வாழ்வை வளமாக்கும் தெய்வம். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து மலை மீது ஏறி அமர்ந்து தன்னிடம் வந்து ஒவ்வொருவருக்கும் தேவையானதை தந்தார் என இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. மலை என்பது உயரத்தின் அடையாளம். வாழ்வில் கடவுளுக்கு நாம் உயர்ந்த இடத்தை கொடுக்கிறோம். மலை ஏறுதல் என்பது கடவுளின் துணையை நாடுவதல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
பலவிதமான உடல் மற்றும் மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தங்களுக்கு நலன் தர முடியும் என நம்பி அவரை தேடி வந்தார்கள். தன்னைத் தேடி வருபவர்களின் தேவையை நிவர்த்தி செய்யக் கூடியவராக இயேசு செயல்பட்டார். நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு நமக்கு கற்றுத் தரும் பாடமும் அதுவே. தேவையில் நம்மைத் தேடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய இன்றைய நாள் வாசகங்களைப் தருகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களின் மீது பரிவு கொண்டார். அவர்களின் பசியை அறிந்திருந்தார் எனவே அவர்களுக்கு உணவு கொடுக்க கூடிய மாபெரும் வல்ல செயலைச் செய்தார்.
இன்று நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் நமது அருகாமையில் இருப்பவர்களின் பசியை உணர்ந்து கொள்ள நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
அன்னை தெரசா கூறுவார் நாம் வாழும் சமூகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கின்றன் என்றால் அது இறைவன் அவனை பராமரிக்கவில்லை என்பதால் அல்ல... மாறாக உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவர்களை பராமரிக்காதனால் நிகழ்ந்தது என குறிப்பிடுகிறார்.
நாம் வாழும் சமூகத்தில் நமது அருகில் உள்ளவர்கள் மீது பரிவு கொள்ளவும் அவர்களின் தேவைகளின் போது அவர்களது தேவைகளை நிறைவேற்றவும் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் துன்புறும் போது எப்படி அடுத்தவர் உதவ வேண்டும் என எண்ணுகிறோமோ. அது போல அடுத்தவர் வாழ்விலும் நாம் அவர்களின் துன்ப நேரங்களில் அவர்களோடு நாமும் ஒருவராக பங்கெடுக்கவும், அவர்கள் மீது பரிவு காட்டவும், இறைவன் அழைப்பு தருகிறார். இத்தகைய செயல்களை நமது வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டு பயணிக்கும் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்குகின்ற நம்மால் அவரை நமது உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்தவர்களாக நமது சொல்லிலும் செயலிலும் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல் வடிவம் தர இறைவன் அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக