புதன், 1 டிசம்பர், 2021

பாறையின் மீது அடித்தளமிட....(2.12.2021)

பாறையின் மீது அடித்தளமிட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நாம் நமது செயல்களால் அவரை நமது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பிறக்கச் செய்ய இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன. 

ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவற்றை நமக்கு கற்பித்தார். அவர் கற்பித்த அனைத்தையும் தன் வாழ்வில் செயலாக்கப்படுத்திக் காண்பித்தார். அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிற நாமும் நமது வாழ்வில் அவரது வார்த்தைகளை செயலாக்கப்படுத்தக் கூடியவர்களாக மாற அழைக்கப்படுகிறோம். 

         அவரது வார்த்தைகளை நாம் நமது வாழ்வில், நமது செயலில் வெளிப்படுத்தும் பொழுது நாம் பாறை மீது கட்டப்பட்ட வீடுகளாக இருப்போம்.

ஆனால் இன்று நாம் வாழுகின்ற உலகத்தில் பல நேரங்களில் நாம் ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிப்பவர்களாக இருக்கின்றோமே தவிர, அதனை செயல் வடிவப்படுத்துபவர்களாகவோ, அல்லது நமது வாழ்வு மூலம் அதற்கு சான்று பகர்பவர்களாகவோ இருக்க மறுக்கிறோம். 

இப்படிப்பட்ட தருணங்களில் எல்லாம் நாம் நமது அடித்தளத்தை மணல் மீது கட்டியவர்களாக இருக்கிறோம். ஆனால்
ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமது அடித்தளத்தை பாறையின் மீது அமைக்க இன்றைய நாளில் நமக்கு அறிவுறுத்துகிறார். 

 பாறையின் மீது அடித்தளம் இடுதல் என்பது, ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை நமது வாழ்வில் பின்பற்றுவதும் செயலாக்கப்படுத்துவதும் ஆகும்.  எனவே ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கின்ற நாம், நமது வாழ்வில் அவரது வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான முயற்சியினை எடுக்க இன்றைய நாள் வாசகங்கள்  நமக்கு அழைப்பு தருகின்றன.

 ஆண்டவரின் வார்த்தைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து பாறையின் மீது அடித்தளமிடப்பட்டவர்களாக  மாறிட இறைவனின் அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...