உயர்ந்தவராக விளங்க...
இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக திருமுழுக்கு யோவானை குறித்து பேசுகிறார்.
யார் இந்த திருமுழுக்கு யோவான் என்று கேள்வியை எழுப்பி ...
யாரைத் தேடி பாலை நிலத்திற்கு போனீர்கள்? அசைந்தாடும் நாணலையா? அல்லது வேறு யாரையாவதா?
மெல்லிய ஆடை அணிந்த மனிதனை தேடிச் சென்றீர்களா? அல்லது அரச மாளிகையில் இருப்போரை தேடிச் சென்றீர்களா? என கேள்வியை எழுப்புகிறார்.
இயேசுவின் இத்தகைய கேள்விகள் திருமுழுக்கு யோவானின் வாழ்வை நம் கண் முன்பாக கொண்டு வருகிறது....இந்த திருமுழுக்கு யோவான் ஆண்டவர்கான வழியை ஆயத்தம் செய்ய வந்தவர். மனிதராய் பிறந்தோருல் இவரை விட பெரியவர் யாருமில்லை. இறைவாக்கினர்களுள் மிகவும் உயர்ந்தவர் இவர் என இயேசு திருமுழுக்கு யோவானை பற்றி குறிப்பிடுகிறார்...
இந்த திருமுழுக்கு யோவானை குறித்து இயேசு கூறுகின்ற வார்த்தைகளின் அடிப்படையில் நாம் இந்த திருமுழுக்கு யோவானை விட உயர்ந்தவர்களாக மாறிவிட முடியும். அதற்கான வழிகளை இன்றைய நாள் நமக்கு எடுத்துரைக்கிறது.
ஆம் அன்புக்குரியவர்களே மனிதராய் பிறந்தோருள் யோவானை விட பெரியவர் ஒருவரும் இல்லை. ஆயினும் இறையாட்சிக்கு உட்பட்டோருள் மிகச்சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என இயேசு குறிப்பிடுகிறார் .
இவ் வார்த்தைகளின் அடிப்படையில் இறை ஆட்சிக்கு உட்பட்ட மக்களாக அன்பையும்
நீதியையும்
நேர்மையையும்
உண்மையையும்
மன்னிப்பையும்
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும்
நாம் கொண்டிருக்க கூடியவர்களாக இருப்போமாயின் நாம் பெரியோர் ஆக கருதப்படும் என இயேசு குறிப்பிடுகிறார்.
ஆண்டவரின் பிறப்பை ஆவலோடு எதிர் நோக்குகின்றன நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இறை வார்த்தைகளின் அடிப்படையில் இறையாட்சியின் மதிப்பீடுகளை நமது வாழ்வாக அமைத்துக் கொண்டு இந்த சமூகத்தில் ஆண்டவர் விரும்பும் வகையில் திருமுழுக்கு யோவானை போல உயர்ந்தவராக விளங்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
இறைவனது வார்த்தைகளின் வழியில் வாழ்வை அழைத்துக்கொண்டு எடுத்துக்காட்டான முன்மாதிரியான வாழ்வு மூலமாக பிறக்கவிருக்கும் பாலம் இயேசுவை உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்க நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொண்டவர்களாய் இந்த திருப்பலியில் தொடர்ந்து இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக