வியாழன், 16 டிசம்பர், 2021

வருங்கால முன்னவர்கள் நாம் ...(17.12.2021)

வருங்கால முன்னவர்கள் நாம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே  இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அழகிய வீடு கட்டிய ஒரு மனிதன் வீட்டிற்கு அன்னை இல்லம் என பெயர் வைத்தான். ஆனால் அவன் அன்னை இருப்பதோ அனாதை இல்லமாக உள்ளது. இதுவே இன்றைய எதார்த்தமாக உள்ள நிலையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியலை இன்று நாம் வாசிக்க கேட்போம்.

மத்தேயு நற்செய்தியாளர் நற்செய்தியின் துவக்கத்திலேயே மூதாதையர் பட்டியலை வைத்தமை காரணம் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை மெசியா என ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதன் அடிப்படையாகும்.

ஆபிரகாம் தாவீது வழி வருகின்ற தலைமுறைகளில் தான் மெசியா பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவ்வகையில் ஆபிரகாமின் வழியாக தாவீதின் வழியாக  மண்ணிற்கு அடையாளம் காட்டப்பட்ட சூசையின் மகனாக இயேசு கிறிஸ்துவை மூதாதையர் பட்டியல் வழியாக மத்தேயு நற்செய்தியாளர் சமகாலத்து யூதர்களுக்கு இயேசுவே உண்மையான மெசியா என்பதனை வரலாற்று பூர்வமாக நிரூபிக்கிறார் ...

இன்று நாம் வாசிக்கக் கேட்ட அன்பர் இயேசுவின் மூதாதையர் பட்டியலை மனதில் வைத்தவர்களை நாம் நமது மூதாதையர்களை நினைவு கூற இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.

மூதாதையரின் வாழ்வு நமக்கு பல விதமான பாடங்களை கற்பிக்கிறது.   

நாம் நமது சொல்லாலும் செயலாலும் நமது மூதாதையர்களை பிரதிபலிக்கக்கூடிய பிரதேசத்தில் இருக்கின்றோம்.

நம்மை பார்த்து வளருகின்ற குழந்தைகள் நம்மை பிரதிபலிப்பது போல நம்மை இம்மன்னருக்கு கொண்டுவந்த நமது மூதாதையரின் நற்பண்புகள் அனைத்தும் நம்மிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற சிந்தனை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு தருகின்றன.

நாம் நமது மூதாதையர்களோடு எப்போதும் இணைந்திருக்க நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம்.  நினைவு நாள் வருகின்ற போது மட்டும் அவர்களை  நினைவு கூறுதல் என்பது ஏற்புடைமை ஆகாது.

ஒவ்வொரு நாளும் அவர்களை நாம் நினைவில் கொள்ளவும் அவர்களின் பண்புகளை நமது பண்புகளாக மாற்றிக் கொண்டு அவர்களை பிரதிபலிக்கும் மனிதர்களாக செயல்படவும் இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.


முன்னோரின் பெயரைச் சொல்லி நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வது மட்டுமல்ல நாம் நோக்கம் ...   முன்னோரின் நற்செயல்களை நமது வாழ்வாக மாற்றுவதும் ...அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினை நமது நம்பிக்கைகளாக கொண்டு நல்ல செயல்கள் பலவற்றில் தொடர்ந்து ஈடுபடுவதும் ... நமது சொல்லாலும் செயலாலும் நமது முன்னோர்களை வெளிப்படுத்துவதும்..., நம்மிடையே வாழுகின்ற முதியவர்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தவர்களாக செயல்பட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.


இன்றைய நிகழ் கால மனிதர்களாகிய நாம்  முன்னவர்களாக மூத்தவர்களாக ஒருநாள் மாறிடுவோம் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய் வாழுகின்ற போதே நமது வருங்கால தலைமுறையினர் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ள பல நற்பண்புகளை விட்டுச்செல்ல இறைவனது அருளை இணைந்து இன்றைய நாளில் வேண்டுவோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...