அன்பின் ஆழம் அன்னை மரியா!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளில் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த உலகில் முதலும் முடிவும் அன்பு. அனைத்திற்கும் அடிவேராகவும் ஆணிவேராகவும் இருப்பது அன்பு.
அன்பினால் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அன்பு மட்டுமே இந்த உலகத்தில் நிலையானது. அன்பு மட்டுமே அனைவரையும் வாழ்விக்க வல்லது.
இன்றைய முதல் வாசகத்தில் கூட இறைவன் மனுக்குலத்தின் மீது கொண்ட அன்பை வெளிப் படுத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாளின் அன்பு செயல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
அன்பிற்கு எதையும் தாங்கும் சக்தி உண்டு என்பதை இன்று நாம் அன்னை மரியாளின் வாழ்வில் காண்கிறோம். பல்வேறு கலகங்களும் குழப்பங்களும் தன்னைச் சூழ்ந்து இருந்தாலும், தன்னைப் படைத்த ஆண்டவர் மீது அதீத அன்பு கொண்ட அன்னை மரியாள், இன்று தமது அன்பு பணிகளின் தேவையை உணர்ந்து வயது முதிர்ந்த எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்ய ஓடோடி விரைந்து செல்கின்றார். தன்னைக் கடந்த, தனது இன்ப துன்பங்களையும் கடந்த அன்னைமரியாள், இன்று தனது ஆழ்ந்த அன்பின் அனுபவத்தால் இவர்களுக்கு உதவி செய்ய விரைகிறார்.
அன்பின் வாரமாகிய இந்த வாரத்தில் நாமும் அனைவரிடமும் அன்னை மரியாவை போன்று பிறருக்கு இரக்கம் காட்ட கூடியவர்களாக, பிறரை அன்பு செய்து மகிழ்ச்சியோடு வாழக் கூடியவர்களாக, நம்மை நாம் உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளில் இறையருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக