வியாழன், 9 டிசம்பர், 2021

ஆண்டவரின் கட்டளைக்கு செவி கொடுத்து வாழ...(10.12.2021)

ஆண்டவரின் கட்டளைக்கு செவி கொடுத்து வாழ...


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தை நடையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
 மண்ணில் பிறந்த மனிதர்கள் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள். ஒவ்வொருவரும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் தனித்துவமான மனிதர்கள் அனைவரும் ஆண்டவரின் கட்டளைக்கு செவி கொடுத்து அவர் கற்பிக்கின்ற நெறிமுறைகளின்படி வாழவேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் வலியுறுத்துகிறது.  ஆனால் பல நேரங்களில் நாம் அவ்வாறு வாழ்வதற்குப் பதிலாக மனம் போன போக்கில் வாழக்கூடிய மனிதர்களாக இருக்கிறோம். ஆனால் நேரம் வரும்பொழுது சூழல் நெருங்குகின்ற போதும் நாம் செய்த செயல்களை குறிப்பிட்டு நாம் தீர்ப்பிடப்படுகின்ற போதெல்லாம், நாங்கள் இதை செய்ய எண்ணினோம், ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. 
நாங்கள் இதை இப்படி செய்ய நினைத்தோம்,  ஆனால் அதை எப்படி செய்வதற்கான சூழல் அமையவில்லை என்று நாம் செய்த செயலை நியாயப்படுத்தக் கூடிய மனிதர்களாகத் தான் பல நேரங்களில் பலர் வாழுகின்றோம்.  ஆனால் நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலுமே அது கடவுளின் திட்டமா? என்பதை உணர்ந்து, கடவுளுக்கு விருப்பமானதா? இறைவன் உணர்த்துகின்ற இறையாட்சியின் விழுமியங்களின் அடிப்படையில் அமைந்ததா? என்பதை சிந்தித்தவர்களாய் நாம் செயல்பட இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன.  அவ்வாறு நாம் செயல்படும்போது மட்டுமே ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வை வாழக்கூடிய அவரின் மக்களாக இருக்க முடியும். அப்படி வாழ்கின்ற போது தான் இறைவன் நம்மை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருப்பார்.  அப்படி இல்லை என்றால், இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டது போல நாம் காரணம் சொல்லக்கூடிய மனிதர்களாகத்தான் இருப்போமே ஒழிய, கடவுளின் விருப்பத்திற்கு இணங்க செயல்படக்கூடிய மனிதர்களாக இருக்க தவறிப் போயிருப்போம்  என்பதை உணர்ந்து கொண்டவர்களாக,  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற இந்த நாட்களில்  நாம் ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்தவர்களாய், அவரது கட்டளைகளை கடைபிடிக்கக் கூடிய மக்களாய் வாழ, அவரது விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய மனிதர்களாக செயலாற்றிட, இறைவன் இன்றைய நாளில் அழைப்புத் தருகின்றார்.  இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் கடவுளுக்கு ஏற்ற வகையில் வாழக் கூடிய மனிதர்களாக வாழ இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம் 
இன்றைய நாள் திருப்பலி வழியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...