திருக்குடும்ப பெருவிழா
ஒரு தம்பதியினர் திருமணம் ஆகி ஒன்பது வருடம் ஆன நிலையில், அந்த தம்பதியினரை அழைத்து அங்கிருந்தவர்கள் எல்லாம் விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். காரணம் கடந்த 50 வருட வாழ்வில் இவர்கள் ஒரு நாளும் சண்டையிட்டுக் கொண்டதே இல்லை என்பதாகும். இவர்கள் இருவருக்குமான விழா, சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் மனைவியானவள் வெளியே சென்றிருந்தாள்.
அப்போது கணவனைப் பார்த்து மற்றவர்கள் எப்படி இந்த 50 ஆண்டுகளில் சண்டை சச்சரவு ஏதும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தீர்கள்? என்று அருகிலிருந்தவர்கள் அந்த மனிதரைப் பார்த்து அவரிடம்,
அந்த ரகசியத்தை எங்களுக்குச் சொல்லித் தாருங்கள் என அனைவரும் கேட்டார்கள்.
அப்போது அவர் சொன்னார், நானும் எனது மனைவியும் திருமணமான பிறகு குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டோம். ஆளுக்கொரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்தக் குதிரை எனது மனைவியை கீழே தள்ளியது. கோபத்துடன் மீண்டும் எழுந்த எனது மனைவி அந்தக் குதிரையைத் திட்டிவிட்டு பயணத்தை தொடர்ந்தாள். மீண்டும் அந்தக் குதிரை இரண்டாவது முறையாக எனது மனைவியை கீழே தள்ளியது. அவள் மீண்டும் எழுந்து அந்த குதிரையையும் முறைத்து பார்த்து விட்டு, 'இதுவே உனக்கு முதல் முறை என்று கூறினாள். சற்று தூரம் சென்றவுடன் மீண்டும் அந்தக் குதிரை அவரைக் கீழே தள்ளியது. மிகுந்த கோபம் கொண்டவனாய் உனக்கு இது மூன்றாம் முறை என்று கூறிவிட்டு தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அதனை சுட்டு விட்டாள்.
உடனே நான் பதறி ஓடி வந்து, இப்படி செய்துவிட்டாயே! நாம் குதிரைக்கு என்ன செய்வது? குதிரைக்காரனுக்கு என்ன பதில் சொல்வது? இவ்வாறு செய்துவிட்டாய்? நமக்குப் பெரும் தீங்கு நேரப் போகிறது என்று கத்தினேன்.
எனது மனைவி என்னை பார்த்து, "உங்களுக்கு இதுதான் முதல் முறை என்று கூறினாள். அன்று மூடிய வாய், இன்றுவரை நான் திறக்கவே இல்லை என்று கூறினார்.
குடும்களை பற்றி நகைச்சுவையாக நாம் இவ்வாறு பேசினாலும்,
இந்த திருக்குடும்பத்தினை நினைவு கூறுகிறோம்.
திருக்குடும்பம் என்றாலே சூசை, மரியாள், இயேசு, இவர்களைப் போல நமது குடும்பங்களும், திருக்குடும்பகளாகத் திகழ வேண்டும்.
இன்று தாய்த்திரு அவையானது திருக்குடும்ப பெரு விழாவினை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது. திருக்குடும்பம் என்றால் சூசை, மரி, இயேசுவைப் போல நமது குடும்பம் திருக்குடும்பமாக இருக்க வேண்டும் என்பதாகும். திருக்குடும்பம் நமக்கு உணர்த்துகின்றன பாடம் என்னவென்றால், அன்று ஆண்டவரின் முன்பாகவும், உறவுகளின் முன்பாகவும், திருஅவை உறுப்பினர்கள் முன்பாகவும், பொதுமக்கள் முன்பாகவும், இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என்று கூறிய வார்த்தைகளை வாழ்வாக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
அன்று அனைவரின் முன்னிலையில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரை நாம் பின் தொடருகின்றோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்த்து, தவறிப்போன தருணங்களை நினைத்து மனம் மாறி மீண்டும் கொடுத்த வாக்குறுதியில் நிலைத்திருக்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
குடும்பம் அன்பு பிறக்கின்ற ஒரு இடம். தியாகம் உருவெடுக்கின்ற ஒரு இடம். பிறரன்பு பணிகள் முதன்மைப்படுத்தப் படுகின்ற ஒரு இடம்.
நான் என்ற மமதையிலிருந்து நாம் என்ற எண்ணம் வளர்வதற்கான ஒரு தளம். இத்தகைய சிறப்பு மிகுந்த குடும்ப வாழ்வு நாம் இந்த சமூகத்தில், ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புவது போல, ஒருவர் மற்றவரை அன்பு செய்து, நம்மை நேசிப்பது போலவே
அடுத்தவரையும் நேசித்து, அடுத்தவரின் தேவைகளை அறிந்து கொள்வதால் அதனை நிறைவு செய்து, ஒருவர் மற்றவருக்காக வாழக்கூடிய ஒரு வாழ்வையே இந்த குடும்ப வாழ்வு நமக்குக் கற்பிக்கின்றது.
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு மூல காரணமாய் இருப்பது குழந்தைகள். இறைவன் தருகின்ற விலைமதிப்பில்லாத பரிசு அவர்கள். இந்தக் குழந்தையை வளர்ப்பதில் தாயும் தந்தையும் கவனத்தோடு செயல்பட்டு சூசையையும் மரியாவையும் போல, நாமும் நமது குழந்தைகளை இயேசுவை எப்படி அவர்கள் ஞானத்திலும் அறிவிலும் பலர் வளர்த்தார்களோ அதுபோல நாமும் நமது குழந்தைகளை வளர்க்க இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. குடும்பம் ஒரு குட்டி திருஅவை என்று கூறுவார்கள். குடும்பமாக வாழ்வதே சிறந்த வாழ்வு. தனித்து வாழ்வதில் சில நன்மைகள் இருப்பது போல் தோன்றினாலும் தனிமை உணர்வு வாட்டும் என்பதை மறந்து விட முடியாது. குடும்பம் குதூகலத்திற்கான ஒரு இடம்.
குடும்பம் கூடி ஜெபிப்பதற்கான ஒரு இடம்.
குடும்பம் கூடி மகிழ்வதற்கான ஒரு இடம்.
இந்த குடும்ப வாழ்வை நாம் சிறப்புடன் நடத்தி இறைவன் விரும்புகின்ற வகையில், திருக் குடும்பங்களாக நாம் மாறிட, இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கின்ற நாம், நமது குடும்பங்களில் இந்த பாலன் இயேசுவை பிறக்கச் செய்வோம். பிறந்திருக்கின்ற பாலன் இயேசுவை ஏற்றுக் கொள்வோம்.
நமது குடும்பத்தில் இந்த பாலன் இயேசு, அன்பையும் அமைதியையும் இரக்கச் செயல்களையும் மேலோங்கச் செய்ய இறைவனது அருளை வேண்டுவோம்.
இறைவன் தாமே நம்மோடு இருந்து, நம்மை ஒவ்வொரு நாளும் வழிநடத்துகிறார்.
கடவுள் நமது குடும்பங்களுக்கு இதுநாள் வரை செய்த நன்மைகளை
நன்றியோடு நினைவு கூர்வோம். அவைகளுக்காக நன்றி செலுத்துவோம்.
கடவுளின் முன்னிலையிலும் திருஅவை உறுப்பினர்களின் முன்னிலையிலும், பொதுநிலையினர் முன்னிலையிலும், உறவுகளின் முன்னிலையிலும் நாம் கொடுத்த வாக்குறுதிகளை, புதுப்பித்துக் கொள்வோம். வாக்குறுதிகளை வாழ்வாக்குவோம். இவை வார்த்தைகள் அல்ல, வாக்குறுதிகள் என்பதை மனதில் இருத்தியவர்களாய், வாழ்வாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக