நன்மைகளின் ஊற்று இறைவன்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வழியாக தந்தையாம் இறைவன் தமது இறைச்சாயலின் மாண்பை வெளிப்படுத்துகிறார்.
ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட தமது மக்களுக்கு அவர் வகுத்திருக்கும் வாழ்வின் வழிகளை நல்வாழ்விற்கான திட்டங்களை அவர் வெளிப்படுத்துகிறார்.
தன்னை உடைத்துக் தரும் நிலமானது விளைச்சலுக்கு பக்குவப்படுகிறது.
நெருப்பில் இடப்படும் பொன்னானது, அழகிய அணிகளாக உருவாகிட பக்குவப்படுகிறது.
மண்ணுக்குள் உடைக்கப்படும் விதையானது மிகப்பெரிய கனிதரும் மரமாக பக்குவப்படுகிறது.
தாம் தேர்ந்துகொண்ட மக்களுக்கு துன்பம் எனும் அப்பத்தையும், கொடுத்து இருந்தாலும் அதன் வழியாகத் தம் மக்களைப் பக்குவப்படுத்திய இறைவன், அவர்களின் வாழ்வை மலரச் செய்கின்றார்.
ஆண்டவரால் பக்குவப்பட்ட மனமானது ஆண்டவரின் வார்த்தை களுக்கு தனது உள்ளத்தை திறந்து வைக்கக் கூடியதாக இருக்கிறது.
திறந்து வைக்கப்பட்ட பாத்திரமே நிரப்பப்படும் என்பதற்கேற்ப ஆண்டவரால் பக்குவப்படுத்தப்பட்ட மனம். மட்டுமே வாழ்வின் வழிகளை கண்டு கொள்கிறது. எனவே நமது மனமானது திறக்கப்பட்ட மனமாக, இறைவனின் சிறப்பான அருளுக்கு பக்குவப்பட்ட மனமாக மாறிட இன்றைய நாளில் இறைவனின் அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக