புதன், 3 நவம்பர், 2021

புதிதாய் பிறப்போம் ....(4.11.2021)

புதிதாய் பிறப்போம் ....

இறைவனே சிவில் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் வாதாட பலருக்கு தெரிந்திரக்கிறது ஆனால் சிலருக்கு மட்டுமே உரையாட தெரிந்திருக்கிறது. இயேசுவின் செய்கைகளில் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு இயேசுவின் செயல்களை குற்றம்சாட்டி வாதாட தொடங்கிய பரிசேய, சதுசேயர்களுக்கு மத்தியில் இயேசு அவர்களோடு  உரையாட கூடியவராக செயல்படுகிறார்.

இழந்ததை  மீண்டும் கண்டு அடைகின்ற போது  உள்ளத்தில் எழுகின்ற மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை என்பதை எடுத்துக்கூறி, பல உவமைகள் வழியாக நாமும் ஆண்டவர் இயேசுவின் பாதையிலிருந்து, அணைப்பிலிருந்து விலகி செல்லாது வாழ இறைவன் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக அழைப்பு தருகின்றார். 


மனிதர்களாக மண்ணில் வாழ்கின்ற நாம் ஒவ்வொருவரும் நமக்காக வாழ்வதைவிட அடுத்தவருக்காக வாழவேண்டும் என்ற செய்திகளை இன்றைய முதல் வாசகம் வழியாக புனித பவுல் தெளிவுபடுத்துகிறார்.

ஆனால் நாம் நமது வாழ்வை மனம் போன போக்கில், விருப்பம்போல அடுத்தவர் நலனை முன்னிறுத்துவதற்கு  பதிலாக தன்னலத்தை மட்டுமே முன்னிறுத்தியவர்களாய் பயணம் செய்து இருப்போமாயின். நாம் இன்றைய நாளில் நம்மை மாற்றிக் கொண்டு ஆண்டவர் இயேசு காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம். பழைய நிலையில் இருந்து மாற்றம் பெற்று புதிய நிலையை அடைகின்ற போது ஆண்டவர் கொள்கின்ற மகிழ்வுக்கு அளவே இல்லை என்பதை இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட காணாமல் போன ஆடு மற்றும் காணாமல் போன திராக்மா நாணயத்தை கண்டுபிடிக்கிற போது எழுகின்ற மகிழ்வினை சுட்டிக்காடடி மனமாற்றம் அடைய இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் அழைத்துக் தருகின்றார்.

இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் இனி வருகின்ற நாட்களில் அடுத்தவர் நலனை முன்னிறுத்திவர்களாய் நமக்காக என்று வாழ்வதை விடுத்து  ஆண்டவருக்காக அதாவது அடுத்தவருக்காக வாழ அடுத்தவரோடு உறவாட உரையாட  இறைவனது அருளை வேண்டுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...