முன்மதியில் நேர்மை அவசியம்....
இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் முன் மதியோடு வாழ்வதற்கு இறைவன் அழைப்பு தருகின்றார்.
இன்றைய நற்செய்தியில் செல்வர் ஒருவரின் வீட்டில் வீட்டு கண்காணிப்பாளர் ஒருவர் பணி செய்து வந்தார். ஆனால் அந்த பொறுப்பாளர் மீது தவறாகப் பழி சுமத்தப்பட்டது. எனவே தலைவர் கணக்குகளை எல்லாம் ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறு கூறினார். இதைக் கேட்ட அந்த வீட்டுப் பொறுப்பாளர் உள்ளம் கலங்கினார். இருந்தபோதிலும் தன் தலைவரின் வீட்டை விட்டுச் சென்றாலும் தன்னை ஆதரிக்க நல்ல உறவுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் முன்மதியோடு செயல்பட்டார்.
பாலஸ்தீன நாட்டில் வீட்டுத் தலைவர் கடன் கொடுக்கும் பொழுது வட்டியோடு சேர்த்து பெறும் வகையில் தான் கடன் கொடுப்பார். வட்டியோடு திரும்பப் பெறும் பொழுது வீட்டு கண்காணிப்பாளருக்கும் குறிப்பிட்ட சதவீதம் கொடுக்கப்படும். எனவே தான் இந்த வீட்டு கண்காணிப்பாளர் தலைவர் தன்னை பிறரின் பேச்சைக் கேட்டு தன் வேலையை விட்டு நீக்கினாலும், தன்னால் இரக்கம் காட்டப்பட்டவர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஆழமாக நம்பி அவர் அவரது கடன் சுமையை குறைக்கிறார். எவ்வாறெனில் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டவரை ஐம்பது என்று எழுத சொன்னார். நூறு மூட்டை கோதுமை கடன்பட்டவரை எண்பது என்று எழுதச் சொன்னார். இவ்வாறாக அவர் தள்ளுபடி செய்தது வீட்டு தலைவருக்கு சேரவேண்டிய கடனை அல்ல ; மாறாக, தனக்குச் சேரவேண்டிய சதவீதத்தில் இருந்துதான் தள்ளுபடி செய்து உதவி செய்திருக்கிறார்.
மதியோடு செயல்பட்டாலும் நேர்மை தவறாது செயல்பட்ட காரணத்தினால்தான் இவரும் விவிலியத்தில் மேற்கோள் காட்டப்படுகிறார்.
இன்று பல நேரங்களில் நாமும் நமது வாழ்வில் முன் மதியோடு வாழுகின்றேன் என்ற பெயரில் இடத்திற்கு ஏற்றார் போல செயல்பட முயல்கிறோம். இரக்கம் மிகுந்த செல்களால் நல்ல செயல்களை நாம் இந்த சமூகத்தில் முன்னெடுக்க இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக