ஞாயிறு, 7 நவம்பர், 2021

மன்னிப்பு - மாமனிதனை உருவாக்கும் ...(8.11.2021)

மன்னிப்பு  - மாமனிதனை உருவாக்கும் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு கிராமத்தில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் இருந்தார். இந்த மூதாட்டி தினந்தோறும் மாலை வேளையில் கல்லறைக்குச் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். எதற்காக இவர் கல்லறைக்கு தினமும் சென்று வருகிறார்? என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அங்கிருந்தவர்களில் சிலர் இந்த வயதான மூதாட்டியை பின்தொடர்ந்தார்கள். கல்லறைக்குச் சென்ற மூதாட்டி தனது கணவனின் கல்லறைக்கு அருகில் அமர்ந்துகொண்டு உன்னை நான் கவனித்துக் கொள்ளாமல் விட்டு விட்டேன். உன் மீது கோபம் கொண்டு உன்னோடு உரையாடாது இருந்து விட்டேன். இனி எப்போது உன்னோடு உரையாட முடியும்? என்று அழுது  புலம்பிக் கொண்டிருந்தார். 

இந்த மூதாட்டியை போலத்தான் நம்மில் பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இருக்கின்றபோது உறவுகளில் விரிசலை உருவாக்கிக்கொண்டு வாழுகின்றோம். இல்லாத போது ஐயோ அவர்கள் இல்லையே என்று ஏங்க கூடியவர்களாக அதை நினைத்து வருந்த கூடியவர்களுமாகத்தான் பல நேரங்களில் நாம் இச்சமூகத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்ட இருக்கிறோம். நாம் இந்த சமூகத்தில் செய்கின்ற சின்னஞ்சிறு செயலும் கூட அடுத்தவரின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நாம் செய்கின்ற செயல்கள் அனைவரையும் அதில் அடங்கி கொள்ளச் செய்கின்றது. 

நாம் இம்மண்ணில் வாழும் நாளெல்லாம் ஒருவர் மற்றவரை மன்னித்து, அன்பு செய்து, விட்டுக் கொடுத்து இன்புற்று வாழவேண்டும் என்பதை இறைவன் விரும்புகின்ற ஒன்றாகும்.


ஒவ்வொரு நாளும் திருப்பலியில் கலந்துகொண்டு திருப்பலியின் துவக்கத்தில் எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று  ஏற்றுக்கொள்கிறேன். சொல்லாலும், செயலாலும், சிந்தனையாலும் , கடமையில் தவறிய தாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே! என் பாவமே! என் பெரும் பாவமே !(என்று இதயத்தில் தட்டி) ஆகையால் எப்பொழுதும் கன்னி மரியாவிடமும், வானதூதர் புனிதர் அனைவரிடம், சகோதர சகோதரிகளே மீண்டும் கூறுகிறேன் சகோதர சகோதரிகளே உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். என்று கூறி பாவமன்னிப்பு வழிபாட்டில் பங்கேற்கும் நாம். எத்தனை முறை நாம் நமது அருகாமையில் இருக்கக்கூடியவர்கள் குற்றங்களையும் இறைவன் மன்னிக்க வேண்டும் என வேண்டி இருப்போம் என்ற கேள்வியை நாம் நமக்கு உள்ளாக எழுப்பி பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன. ஜெபம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. அவை வாழ்வாக்கப்பட வேண்டியவை. மன்னிக்கிற போதுதான் நாம் மாமனிதர்களாக சமூகத்தில் மாறுகிறோம்.

மன்னிப்பு மண்ணில் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்விலும் மலர வேண்டிய ஒன்று....

நாம் தினமும் பயன்படுத்துகின்ற விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே  ஜெபத்தில் கூட ... பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் என்ற வார்த்தைகளை நாம் பயன்படுத்துகின்றோம். நாம் எந்த அளவையால் அளக்கின்றோம் அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும்.

 இன்றைய நாளில்  இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவரம் மன்னிப்பை மனதில் கொண்டு ஒருவர் மற்றவரை அன்பு செய்து எப்போதும் இன்புற்று வாழ இறைவன் அழைப்பு தருகின்றார்.

 நாம் மன்னிக்க மறந்த மனிதர்களை நினைவு கூறுவோம். அவர்களை. மன்னித்து அவர்களோடு உறவை புதுப்பித்துக் கொள்ள இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார்.
  இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் மனிதர்களாகிய நாம் மன்னிப்பின் வழியாக மாமனிதர்களாக மாறிட இறைவனது அருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...