திங்கள், 1 நவம்பர், 2021

இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு தினம்...(2.11.2021)

இறந்த நம்பிக்கையாளர்களின் நினைவு தினம்...

இன்று நான் தாய் தருபவையாக இணைந்து இறந்த நம்பிக்கையாளர்களின் தினத்தினை நினைவு கூறுகின்றோம்.

நவம்பர் மாதம் என்றாவே கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப் போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் . புதுப் பொலிவுடன் தோற்றம் தருகின்றன . கல்லறைகளைச் சுத்தம் செய்து வெள்ளையடித்தல் , கல்லறைகளை சந்தித்தல் , இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றல் , இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால் நவம்பர் மாதம் மிகவும்  முக்கியமானதாக மாறிவிடுகிறது . 

ஏன் இந்தக் கொண்டாட்டங்கள் . ஏன் இந்த ஆர்ப்பரிப்பு ? எதற்காக நாம் இறந்தவர்களை நினைவு கூறுகின்றோம் . அனைத்து ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக் கற்றுத்தருகின்றன. என சிந்திக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.


தொடக்க 
திருஅவையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக இருந்தன . காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர் . இவ்வாறாகத்தான் இவ்விழா படிப்படியாக வளர்ச்சி பெற்றது.

இறந்த நம்பிக்கையாளர்களை நினைவு கூறுகின்ற இந்த நல்ல நாளில் என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தி என்ன என்று சிந்திக்கின்ற போது 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் என்னிடம் வரும் எவரையும் நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன் என்று இயேசு கூறும் வார்த்தைகளை இறந்துபோன நம் உறவுகளோடு இணைத்துப் பார்க்கின்றபோது  இவ்வார்த்தைகள்  நம் அனைவருக்கும் ஆறுதலாய் அமைகிறது. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அனைவரையும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வதே தன்னை அனுப்பிய தந்தையின் திருவுளம் என்று இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகள் மூலம் கடவுள் தன் பிள்ளைகளில் ஒருவரையேனும் இழக்கத் தயாராக இல்லை என்ற உண்மையை நமக்கு தெளிவுபடுத்துகிறார்.



இச்செய்தியை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக புனித பவுல் நாம் பாவிகளாக இருந்து கடவுளைவிட்டுப் பிரிந்த போதும் கிறிஸ்து தன் உயிரை தந்து நம்மை கடவுளோடு ஒப்புரவாக்கியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
கிறிஸ்துவின் மூலம் கடவுள் தன் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.


இந்த  இயேசு கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழும் சமூகத்தில் மரணத்தை நெருங்கும் நேரம் வரை  ஒவ்வொரு நாளும்  இரக்கம் நிறைந்த செயல்களால்  பொன்னை நெருப்பிலிட்டு தூய்மைப்படுத்துவது போல இறைவனது அன்பில் நம்மை தூய்மைப்படுத்திக் கொண்டு எப்போதும் பிறர் நலன் பேணும் நல்ல செயல்களை செய்வதன் மூலமாகவும், மரணத்தை நெருங்கும் நேரம் வரை சக மனிதர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டு அன்பு செய்து வாழவும் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

2 மக்கபேயர் 12ஆம் அதிகாரத்தில் இறந்து போனவர்களுக்காக ஜெபிப்பதற்கு பணம் திரட்டும் பணியில் எழுத முற்படுகிறார் என்பதை நாம் வாசிக்க கேட்கலாம்.  நாமும் இறந்து போனவர்களுக்காக ஜெபிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

நம்மை விட்டு பிரிந்து இறைவனின் திருமுன் நிலையில் இருக்கக்கூடிய இறந்துபோன நமது உறவுகள் அனைத்தும் நாம் வாழும் இச்சமூகத்தில் எப்போதும் நல்ல மனிதர்களாக நாம் வாழ நமக்காக இறைவனிடத்தில் வேண்டுவார்கள். அவர்களிடத்தில் காணப்பட்ட நற்பண்புகளை எல்லாம் நமது பண்புகளாக மாற்றிக்கொண்டு ஆண்டவர் காட்டுகின்ற அன்பின் பாதையில் பயணம் செய்ய இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...