நேர்மையால் நண்பன் ... நன்றி மறவா மனிதர்களாக நாம் ...
இன்றைய வாசகங்கள் ஒன்று தொடர்புடைய மூன்று கருத்துக்களை நமக்கு தெளிவுபடுத்துகின்றன
1. நேர்மையை கையாளுதல்.
2. நண்பர்களை சேகரித்தல்.
3. நன்றி சொல்லுதல்.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் பல நேரங்களில் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதர்களில் பெரும்பான்மையானோர் பணத்தை தேடுவதில் தங்கள் வாழ்வில் பாதிய இழந்து விடுகிறார்கள்.
பணத்தால் செல்வத்தால் அனைத்தையும் செய்யமுடியும் என்றால் நீங்களும் நானும் எதற்கு இந்த உலகத்தில்... நாம் நிலையானது என எண்ணி ஓடி ஓடி தேடி தேடி சேர்த்து வைக்கின்ற செல்வங்கள் எல்லாம் எப்போதும் நம்மோடு வருவதில்லை இதை அனைத்து மனித மனங்களும் அறிந்திருந்த நிலையிலும் இந்த செல்வத்தை தேடுவதில் தான் பல நேரங்களில் நாட்டம் கொள்ள கூடியவர்களாக நாம் இருக்கின்றோம்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த செல்வத்தை கையாளுவதில் நேர்மையோடு இருக்க அழைப்பு தருகின்றார்... செல்வத்தை பயன்படுத்துவதில் நேர்மையோடு செயல்படுகின்ற போது நல்ல பல நண்பர்களை நாம் நமதாக்கிக் கொள்ள முடியும்.
இன்பம் எனும் போர்வைக்குள் நண்பன் இருக்கையில் உதவி செய்ய வருபவன் அல்ல நல்ல நண்பன் துன்பம் என்னும் நெருப்பினில் உழன்று கொண்டிருக்கும் பொழுது ஓடிச்சென்று காப்பவனே உண்மையான நண்பன் என்பார்கள்.
ஆண்டவர் நம்மிடம் இருக்கின்ற செல்வங்களைக் கொண்டு நல்ல நண்பர்களை நம்முடையவர்களாக்கிக் கொள்ள அழைப்பு தருகின்றார்.
நாம் அனைவருமே இந்த சமூகத்தில் யாரோ ஒருவருக்கு நண்பர்களாக இருப்போம். நமக்கும் பலவிதமான நண்பர்கள் இருப்பார்கள். நண்பனின் கடமை இன்னொரு நண்பனுக்கு துணை நிற்பது மட்டுமல்ல தவறான வழிகளில் செல்லுகின்ற போது அது தவறு என சுட்டிக் காட்டுகின்ற பண்பு நண்பனுக்கே உரித்தானதாகும்.
நல்ல நண்பர்கள் கிடைப்பது நாம் செய்த வரம் எனக் கூறுவார்கள். நமது செயல்களில் நேர்மை நிலைத்து இருக்கின்ற போது நல்ல நண்பர்கள் நம்மை சுற்றி உதயமாவார்கள் என்பது இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகின்ற பாடமாக இருக்கின்றது. நண்பர்கள் நமக்கு செய்கின்ற பணிகள் ஏராளம். அவர்கள் கற்றுத் தருகின்ற பாடங்கள் ஏராளம். அனைத்தையும் எப்போதும் நன்றியோடு நினைவில் கொள்ளவும் அவர்களுக்கு நன்றி கூறவும் இன்றைய முதல் வாசகம் வலியுறுத்துகிறது. திருத்தூதர் பவுல் தன்னுடைய நற்செய்தி அறிவிப்புப் பணியில் தன்னுடன் உடன் பயணித்த உடன் உழைப்பாளர்களான ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அவர்களுக்கு நன்றியை கூறுகின்றார்.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் நம்மோடு நமக்காக நம் மீது அக்கரை கொண்டவர்களாய் நம்முடன் பயணிக்கின்ற நண்பர்களை எண்ணிப் பார்ப்போம். நல்ல நண்பர்களை இறைவன் நமக்குத் தந்ததற்கு நன்றி கூறுவோம். நண்பர்கள் வழியாக நம்மோடு இருந்து நம்மை நல்வழி நோக்கி அழைத்துச் செல்லும் நல்ல நண்பனா இயேசுவோடு நல்லுறவில் வளர இறைவனது அருளை இணைந்து வேண்டுகோள் இந்த திருப்பலி வழியாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக